2023 ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான புறப்பாட்டு இடங்கள் 10 ல் இருந்து 25 ஆகஉயர்த்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹஜ் பயணம் செல்வோர்விண்ணப்ப படிவங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பெற்றுக் கொள்வதற்கானஅரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் புனித பயணத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும், அவர்களுக்கான பொருளாதார விலக்கும்அளிக்கப்படுகிறது.இதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட தொகையை ஹஜ் பயணம் மேற்கொள்வோர் முன்கூட்டியேசெலுத்த வேண்டும். தற்போது போர்வை,குடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர்களே சொந்தமாகஎடுத்து வருவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பயணிக்கும் 50 ஆயிரம் ரூபாய் செலவுகுறைந்து மிச்சமாகும்.மேலும் முன்னதாக செலுத்தவேண்டிய வைப்புத் தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 36 கோடி இஸ்லாமியர்கள் பயனடைவார்கள்.
விண்ணப்பம் இலவசம், வைப்புத் தொகை குறைப்பு பயண ரீதியான உதவிகள் ஆகிய அனைத்தையும் மத்தியஅரசு செய்திருக்கிறது. இதற்கான உத்தரவை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஹஜ் பயணம் செல்வோர் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட உள்ளது.தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து இந்திய அரசு சவூதி அரசுடன்பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை, மத்தியசுகாதாரத்துறை, மாநில ஹஜ் கமிட்டி, இந்திய ஹஜ் கமிட்டி மாநில வெளியுறவுத்துறை அமைச்சகம், சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் கூட்டு பேச்சுவார்த்தையும் நடைபெற்று உள்ளது.
ஆன்லைன் மூலம் இனி அனைவரும் எளிதாக விண்ணப்பிக்கலாம். பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள்ஆகியோருக்கு கூடுதல் வசதி செய்து தர முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்தியசிறுபான்மை துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி எழுத்துப்பூர்வமாக மக்களவையில் தாக்கல்செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்து தந்த மாண்புமிகுஇந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் மனமார்ந்தநன்றிகளை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தலைவர்,
பிரசிடெண்ட் அபூபக்கர்,
இந்திய ஹஜ் அசோசியேசன், புதுதில்லி.