பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, ” கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது நடிக்க முடியுமா? யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள் நான் அவரை வணங்குகிறேன், என வெளிப்படையாக கூறியிருந்தார்.ஒருவேளை அப்படியே நடித்திருந்தால் அவர் சிவாஜியை பின்பற்றித்தான் நடித்திருக்க முடியும், எப்படியாவது அவரின் சாயல் வந்துவிடும் எனவும் கூறினார், 1952 வரை வட இந்திய நடிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் பற்றி மிக இகிழ்ச்சியான எண்ணம் இருந்து வந்தது, நடிகர்திலகத்தின் பட உலக பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பு என்றால் இவ்வளவு இருக்கிறதா? என்ற திகைப்பும் வாயடைப்பும் அவர்களுக்கு ஏற்ப்பட்டது. நடிப்புக் கலையைப் பொறுத்தவரை நடிகர்திலகத்தை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. ஆனால் தமிழர்களுக்கு எப்போதுமே தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் சிலர் நடிகர்திலகத்தின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
கட்டுரை வெளியீடு 19/02/1986
தினகரன் நாளிதழ்
மக்கள் தொடர்பு: டைமன் பாபு