“ஆடுஜீவிதம்” திரைப்பட விமர்சனம்

 அரேபியாவிலுள்ள ஒரு நிறுவன அலுவலகத்திற்கு அதிகாரி வேலைக்கென செல்லும் பிருதிவ்ராஜ் சுகுமாறன் ஏமாற்றப்பட்டு, பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கும் வேலைக்கு கட்டாயப்படுத்தி அமர்த்தப்படுகிறார். அங்கிருந்து தப்பிச் செல்லும் அவரின் பயணத்தை படம் விவரிக்கிறது. இயக்குனர் ப்ளெஸ்ஸி ஒரு கடினமான கதையைத் தேர்ந்தெடுத்து திரையில் உயிர்ப்பித்தார், பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கான அவரது அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டும். உடல் எடையை குறைப்பதில் இருந்து, அவரது முகம் தாடி, கருப்பு நிற பற்கள் மற்றும் அழுக்கு நகங்கள் வரை,கதா பாத்திரத்திற்காக தனது தோற்றத்தியே மாற்றியிருக்கிறார். .ஆர்.ரஹ்மான் பின்னணி இசையில் படத்தை வேறொரு நிலைக்கு உயர்த்தியிருக்கிறார். வெளிநாட்டு வ்ந்ந்லைக்கு செல்லும் மோகம் கொண்ட இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம்*******