சமூகப் போராளிகள் அருந்ததிராய் மற்றும் மேதாபட்கர் ஆகியோரின் கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை கண்டித்து இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் கண்டனக் கூட்டம் சென்னை அண்ணாசாலை தேனாம்பேட்டை எம்.கே அரங்கத்தில் இஸ்கப் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் தேசிங் தலைமையில் நடை பெற்றது, இஸ்கப் மாநிலச் செயலாளர் தமிழ்மது வரவேற்புரையுடன் மாநில துணைப் பொதுச்செய லாளர் எஸ்.பாஸ்கரன் அறிமுக உரையுடன் பெண்கள் அமைப்பின் நர்மதா,தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆ.கோப ண்ணா உள்ளிட்டோர் கருத்துரைத்துப் பேசினர். மாநிலச்செயலாளர் ரதன் சந்திர சேகரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் முடிவில் ஹூசேன் நன்றி தெரிவித்தார். பத்திரிகை ஊடகவியலாளர்கள், பெண் அமைப்பினர், சென்னை மாவட்ட இஸ்கப் உறுப்பினர் கள் மற்றும் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கண்டனத் தீர்மான ங்கள் நிறைவேற் றப்பட்டு அனைவரின் கையொப்பங்கள் பெறப்பட்டது.