சென்னை, 20 அக்டோபர் 2021: கண் பராமரிப்பு சிகிச்சையில் இந்தியாவின் மிகப்பெரிய வலையமைப்பான டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம், சென்னையில் உள்ள கௌரிவாக்கத்தில் ஆரம்ப கண் பராமரிப்பு மையத்தை 20/20 ஐகேர் என்ற பெயரில் தொடங்கியுள்ளது. பிரபல நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா இவ்விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, இம்மையத்தை திறந்து வைத்தார். டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளின் மருத்துவ சேவை பிரிவின் பிராந்திய தலைமை அலுவலர் டாக்டர். வந்தனா ஜெயின் மற்றும் டாக்டர் அகர்வால் குழும கண் மருத்துவமனைகளின் தலைமை செயல் அலுவலர், டாக்டர். ஆதில் அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 20/20 ஐகேர் சென்டர் என்பது, கண் ஆரோக்கியத்திற்கான முழுமையான பரிசோதனைகளை வழங்கும் ஒரு நவீன கண் சிகிச்சை மையமாகும். ஒளிவிலகல், கண் அழுத்தம் மற்றும் பார்வைக்கூர்மை ஆகியவற்றின் அளவை துல்லியமாக அளவிடுவதற்கு நவீன சாதனங்களை இம்மையம் கொண்டிருக்கிறது. இத்தொடக்கவிழா கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் 2021 அக்டோபர் 31 ஆம் தேதி வரை இலவச கண் பரிசோதனைகளை பொதுமக்களுக்காக 20/20 ஐகேர் பை அகர்வால்ஸ், கௌரிவாக்கம் செய்கிறது. அத்துடன் கண் கண்ணாடிகளுக்கான குறிப்பிட்ட பிரேம்கள் மீது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு சலுகையையும் சேர்த்து வழங்குகிறது. எந்தவொரு நபரும் இம்மையத்திற்கு வருகை தந்து, இலவசமாக கண் பரிசோதனையை செய்து கொள்ளலாம்.
டாக்டர் அகர்வால் குழும கண் மருத்துவமனைகளின் தலைமை செயல் அலுவலர், டாக்டர். ஆதில் அகர்வால், இம்மையம் தொடங்கப்படுவது குறித்து கூறியதாவது: நாடெங்கிலும் முழுமையான கண் பராமரிப்பு சிகிச்சையை அனைவருக்கும் கிடைக்குமாறு செய்வது என்ற எமது பொறுப்புறுதியிலிருந்துதான் 20/20 ஐகேர் பை டாக்டர் அகர்வால்ஸ் மையம் உருவாகியிருக்கிறது. சிறந்த பயிற்சி பெற்ற பார்வைத்திறன் நிபுணர்களோடு மெய்நிகர் முறையில் இணைக்கப்பட்டுள்ள நிபுணத்துவம் மிக்க கண் மருத்துவர்களின் சிறப்பான கலவையை இம்மையம் ஒன்றுசேர்த்து வழங்குகிறது. வெவ்வேறு கண் பாதிப்பு நிலைகளை கண்டறியவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் நவீன சாதனங்களை கொண்டிருக்கும் இம்மையம், கௌரிவாக்கத்திலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் தரமான கண் சிகிச்சை / பராமரிப்பிற்கான அணுகுவசதியை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.”
அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளின் மருத்துவசேவைக்கான பிராந்திய தலைவர் டாக்டர். வந்தனா ஜெயின் இதுகுறித்து பேசுகையில், “டாக்டர் அகர்வால்ஸ் – ன் 20/20 கண் பராமரிப்பு மையத்தின் நோக்கம், அடிப்படை கண் பராமரிப்பு சேவையை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்குமாறு செய்வது மற்றும் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் கண் பராமரிப்பு சேவைகளை தேடி பெறும் நிலையையும், விழிப்புணர்வையும் அதிகரிக்க உதவுவது என்பதாக இருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரபிரதேஷ் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில், குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதுபோன்ற 100 மையங்களை நிறுவுவது எங்களது திட்டம்.” என்று கூறினார்.
நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா இத்தொடக்க விழா நிகழ்வில் பேசுகையில், “20/20 ஐகேர் பை டாக்டர் அகர்வால்ஸ் என்ற இப்புதிய மையத்தை தொடங்கி வைப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. கண்ணை பாதுகாப்பதும், சிறப்பாக பராமரிப்பதும் முக்கியமானது. அனைத்து வயது பிரிவிலும், சிறந்த பார்வைத்திறனை கொண்டிருப்பதற்கு உரிய காலஅளவுகளில் கண் பரிசோதனை செய்வது முக்கியம். கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தரமான கண் பராமரிப்பு சிகிச்சையைப் பெறுவதற்கு உதவும் வகையில் 2 மற்றும் 3 – ம் நிலையில் உள்ள சிறு நகரங்களில் இம்மையங்களை நிறுவ கவனம் செலுத்துவதற்காக டாக்டர். அகர்வால்ஸ் குழுமத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.
கடை எண். 1, தரைத்தளம், 141, வேளச்சேரி பிரதான சாலை, கௌரிவாக்கம் (மோர் சூப்பர் மார்கெட் அடுத்து) என்ற முகவரியில் அமைந்துள்ள இப்புதிய மையம், விரிவான கண் பரிசோதனைகளை கண் மருத்துவர்களுடன் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனையையும் வழங்குவதுடன் கண் கண்ணாடிகள் மற்றும் குளிர் கண்ணாடிகளையும் விற்பனைக்கு வழங்குகிறது.
மக்கள் தொடர்பு: மகேஷ்