ஏ ஜி எஸ் நிறுவனம் சார்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்திருக்கும் படம் “கோட்”. உலகளவில் நடக்கும் தீவிரவாதத்திற்கும் அதை ஒழித்துக்கட்ட போராடும் உளவுத்துறைக்கும் நடக்கும் கதை. தனது மனைவி சினேகா 5 வயது மகனுடன் தாய்லாந்துக்கு செல்கிறார் விஜய். அஙுகு நடந்த ஒரு கார் விபத்தில் தனது 5வயது மகன் விபத்ஹில் இறந்துவிட்டதாக நினைத்து சினேகாவுடன் சென்னைக்கு திரும்பி விடுகிறார். மனச்சோர்விலிருக்கும் விஜய் சில வருடங்கள் கழித்து ரஷ்யாவுக்கு செல்கிறார். அங்கு தன்னைப்போலவே இருக்கும் விஜயை இளைஞனாக பார்க்கிறார். அவன் தான் தன் மகன் என்பதை அறிந்து கொள்கிறார். இவர்தான் தன் அப்பா என்றும் இளைஞனாக இருக்கும் விஜய்யும் தெரிந்து கொள்கிறார். இருவரும் சென்னைக்கு வந்துவிடுகிறார்கள். பிறகு விஜய்யின் கூட்டாளிகளும் அவர்களது குடும்பத்தினர்களும் ஒருவர்பின் ஒருவராக கொல்லப்படுகிறார்கள். யார் கொன்றது? என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை. 5வயது மகன் இறந்ததாக எண்ணி விஜய் கதறும் காட்சியிலும் மகனை இளைஞனாக காணும் காட்சியிலும் விஜய்யின் நடிப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது. இறந்துபோனதாக நினைத்திருந்த மகன் இளைஞனாக திரும்பி வந்ததை பார்க்கும் காட்சியில் தாய்மையின் துடிப்பை நம் கண்முன் காட்டுகிறார் சினேகா. இக்காட்சியை இளகிய மனமுடைய தாய்மார்கள் பார்த்தால் திரையரங்கிற்குள் அழுதுவிடுவார்கள். துடிப்பான உடற்கட்டுடன் தோன்றும் பிரசாந்த் தன் மகளின் இறப்பை பார்த்ததும் குறுகிப்போய் அழுவது படத்தைப்பார்க்கும் தந்தைமார்களின் கண்கள் ஈரமாகிவிடும். அப்படியொரு நடிப்பு. வாழ்த்துக்கள் பிரசாந்த். தங்களது இயல்பான நடிப்பால் பிரபுதேவா, ஜெய்ராம் திரையரங்கில் கைத்தட்டலை பெறுகிறார்கள். கேப்டன் விஜய்காந்த், அஜீத், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ஆகியோரின் ரசிகர்களயும் திருப்தி படுத்தியிருக்கிறார் விஜய். மூன்று மணி நேரம் போவதே தெரியாமல் படமாக்கியிருக்கும் வெங்கட்பிரபு பாராட்டுக்குரியவர். யோகிபாபு, பிரேம்ஜி, வி.டி.வி.கணேசன் ஆகியோரின் நகைச்சுவை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. எதிபாராத திருப்பங்களில் யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை அசத்துகிறது.