ஏஜிஎஸ் எண்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கும் படம் லவ்டுடே. பிரதீப் ரங்கநாதனும் இவானாவும் இணைபிரியாத காதலர்கள். திருமணத்திற்கு பெண் கேட்டு பிரதீப், இவானாவின் தந்தை சத்தியராஜிடம் செல்கிறார். அதற்கு சத்யராஜ் பிரதீப்பின் செல்போனை இவானிடமும் இவானின் செல்போனை பிரதீப்பிடமும் கொடுத்து நான்கு நாட்கள் இதை வைத்திருக்க வேண்டும். பிறகு வந்து பெண் கேட்டால் தருகிறேன் என்று கூறி பிரதீப்பை அனுப்பிவிடுகிறார். பிரதீப்பிடமிருக்கும் இவானின் செல்போனின் குறுஞ்செய்திகளில் தனக்குமுன் இவான் யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தாள் என்பதை பிரதீப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதேபோல் பிரதீப்பின் செல்போன் குறுஞ்செய்தியை இவான் பார்த்து தன்னை காதலிப்புதற்குமுன் பிரதீப் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தான் என்பதை தெரிந்து கொண்டு அதிச்சியடைகிறார். இதற்கு பிறகும் திருமணம் செய்து கொண்டார்களா என்பதுதான் கதை. ஆரம்பம் முதல் கடைசி வரை படம் முழுவதும் நகைச்சுவையாகவே செல்கிறது. திரைக்கதை அமைப்பு அற்புதமாக இருக்கிறது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் திரையுலக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.