இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் இயக்கத்தில் ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இணைய தொடர் பேட்டைகாளி. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தமிழர்களின் வீரத்தையும் ரோஷத்தையும் வெளிபடுத்துகின்ற இயக்குநர் பாராட்டுதலுக்குரியவர். பண்ணையார் வீட்டு ஜல்லிக்கட்டு காளையை ஏழை குடிமகனான மாடுபிடி வீரர் கலையரசன் அடக்குகிறார். இதில் ஆத்திரமடைந்த பண்ணையார் வேல ராமமூர்த்தி , கலையரசனை கொன்றுவிடுகிறார். இதில் ஆத்திரமடைந்த கலையரசனின் மாமன் கிஷார் பண்ணயார் வீட்டு காளை மாடு ஜல்லிக்கட்டு வாடிக்கு வந்தால் அதை அடக்குவதாக சபதமிடுகிறார். தமிழனின் வீரத்தையும் ரோஷத்தையும் உலகெங்கும் ஆஹா ஓடிடி தளம் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.****