இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 309-ஆவது பிறந்த நாளான இன்று காலை (1.9.2024 – ஞாயிற்றுக் கிழமை), `தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும்செவல்’ என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல் ஊ. சீனிவாசன், கழக துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன், கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார், கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி,கழக அமைப்புச் செயலாளர் ஏ. கருப்பசாமி பாண்டியன், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஏ.ஏ. ராஜன் செல்லப்பா, கழக அமைப்புச் செயலாளர் சுதா கே. பரமசிவன், கழக அமைப்புச் செயலாளரும், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாஸ்கரன், கழக வர்த்தக அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பச்சைமால்,கழக அமைப்புச் செயலாளரும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான என். சின்னத்துரை, கழக அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் சீனிவாசன், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், கழக மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.ஆ. ராஜலெட்சுமி, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களான பாப்புலர் ஏ. முத்தையா, அய்யாத்துரைபாண்டியன் திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை சூ. கணேசராஜா, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கிருஷ்ணமுரளி, தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய பிறந்த நாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக அமைப்புச் செயலாளரும், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. இசக்கி சுப்பையா, திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை கணேசராஜா, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கிருஷ்ணமுரளி, தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் செல்வமோகந்தாஸ்பாண்டியன் ஆகியோர் இணைந்து, சிறப்பான முறையில் செய்திருந்தனர்.