அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வரும் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை கடன் வசூலிப்பை நிறுத்தி வைக்க இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இதை மீறி, வங்கிசார நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி, கடன் வசூலில் ரிசர்வ் வங்கியின் அனுமதியையும் மீறி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை தடுத்து நிறுத்தவும், வாகன உரிமையாளர்களின் புகார்களை விசாரிக்க தனிப் பிரிவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.