மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 220-ஆவது குருபூஜை 24.10.2021 – ஞாயிற்றுக் கிழமை), சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர் அவர்களுடைய மணிமண்டபத்தில் உள்ள திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல்
ஊ. சீனிவாசன், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திரு. சு. காமராஜ், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. மணியன், மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் மு. ராஜூ, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி இந்திரா, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. உதயகுமார், முன்னாள் அமைச்சர் திரு பாஸ்கரன், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. செந்தில்நாதன், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்