பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் தோன்றி மனதை ஈர்க்கும்படியான நடிப்பை தருபவர். ஹீரோயின் அப்பா, போலீஸ் கமிஷ்னர் என இவரது முகம் மனதிற்குள் பச்செக்கென ஒட்டிக்கொண்ட முகம். ஓடிடி பான் இந்தியா என வளர்ந்திருக்கும் திரைத்துறையில் இப்போது இவரது திரைப்பயணம் வெற்றிப்பாதை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.*****
தன் நடிப்பால் கவனம் ஈர்க்கும் நடிகர் அஜித் கோஷி பற்றி..
உங்களை பற்றி..
“நான் பிறந்தது கேரளாவில், ஆனால் வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னை தான். பக்கா ராயபுர வாசி.
நான் குடும்பத்துடன் ராயபுரத்தில் வசித்து வருகிறேன். சினிமா ஆர்வம் என் இளைமைப்பருவத்தில் இருந்தேஎனக்கு
பள்ளி, கல்லூரிகளிலயே மேடை ஏறி நடிப்பது, நாடகம் போடுவது என நடிப்பின் மீது தீராத ஆர்வத்துடன்இருந்தேன். அப்பொழுதே எனக்கு நடிப்பு துறையில் ஒரு ஆர்வம் இருந்தது, ஆனால் அப்போது என்னால் முழுவீச்சுடன் நடிப்பு துறைக்குள் இறங்க முடியவில்லை. அதற்கான வாய்ப்புகள் அப்போது கிடைக்கவில்லை. பின்னர் 45 வயதுக்கு பிறகு, ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என மனதில் தோன்றிய எண்ணத்தில் தான்தீவிரமாக நடிகராக மாற வேண்டும் என்று முடிவெடுத்து இறங்கிவிட்டேன். இப்போது 35 படங்கள், 40 விளம்பரங்கள், 5 வெப் சீரிஸ்கள் என தொடர்ந்து எனது திரைப்பயணம் சிறப்பாக போய்கொண்டு இருக்கிறது.
நடிக்க வருவதற்கு முன்..
நடிக்க வருவதற்கு முன் நான் கன்ஸ்ட்ரக்சன் பிரிவில் ரூஃப் இன்ஸ்டாலிங்க் செய்து வந்தேன், சில காலம்துபாயில் தொழில் செய்து கொண்டு இருந்தேன், 2010-க்கு பிறகு தான் நான் தமிழ்நாட்டிற்கு வந்தேன், பின்னர்எல்லாவற்றையும் விட்டுவிட்டு சினிமாவிற்கு வந்துவிட்டேன். ஆனால் நடிகராக வேண்டும் என்ற எண்ணம் தான்என்னை இங்கு இழுத்து வந்துவிட்டது. ரிஸ்க் எல்லா இடத்திலும் இருக்க தான் செய்கிறது. நடிகராக நான்இங்கு தொடர்ந்து இயங்கி கொண்டு இருப்பதிலும் ரிஸ்க் இருக்க தான் செய்கிறது. ஆனால் நாம் ரிஸ்க் எடுததுதான் ஆக வேண்டும்.
நீங்கள் அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறீர்கள்..!?
அது ஏன் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் இதில் ஒரு ஸ்ட்ரீயோடைப் செய்கிறார்கள். எதாவது ஒருபடத்தில் போலீஸ் கதாபாத்திரம், கமிஷ்னர் கதாபாத்திரம் வேண்டுமென்றால் அஜித் கோஷியெய் அழைக்கலாம்என்று முடிவெடுத்துவிடுவார்கள். எனக்கு தெரிந்து எனது பெயரையே கமிஷ்னர் அஜித் கோஷி என்றுதான்டெக்னீஷியன் சிலர் அவர்களது செல்லில் வைத்துள்ளார்கள்.
ஒரு கமிஷ்னர் கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்து அவர்கள் என்னைஅணுகுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கு வரும் கதாபாத்திரங்களை தொடர்ந்து நான்மறுக்காமல் செய்து வருகிறேன். நிறைய கதாபாத்திரங்கள் செய்த பின்னர், பலர் என்னை பார்த்து எனக்குசிறந்த வாய்ப்புகளை வழங்க வாய்ப்பு இருக்கிறது, அதனால் நான் தொடர்ந்து இயங்கி வருகிறேன். வேஷ்டியெய் மடித்து கட்டி கிராமத்து வேடங்களில் நடிக்க ஆசை.
நீங்கள் இதுவரை பண்ண கதாபாத்திரங்களில் உங்களுக்கு நெருக்கமாக அமைந்த கதாபாத்திரம்..
நந்தா சார் முன்னணி நாயகனாக நடித்த இருதுருவம் வெப் தொடரில் ஒரு வில்லன் கதாபாத்திரம் செய்துஇருந்தேன், அது எனக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது. அந்த தொடரின் இரண்டாவது சீசன் இப்போதுவிரைவில் வெளியாக உள்ளது. அதன்பிறகு விஷால் சார் உடைய ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தில் நடித்துஇருந்தேன், அதில் எனது கதாபாத்திரம் அனைவரையும் ஈர்க்கும்படி இருந்தது. அதன் பிறகு உலகம் முழுவதும்பலமொழிகளில் வெளியாகி மிகபெரிய வெற்றிபெற்ற சுழல் தொடரிலும் நான் நடித்து இருந்தேன், அந்ததொடர் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அந்த தொடரை பார்த்து எனக்கு நிறைய இந்திதொடர்களில் இருந்தும் வாய்ப்பு வந்தது. அதற்கு புஷ்கர் காயத்ரிக்கு தான் நன்றி கூற வேண்டும்.
என்ன மாதிரியான கதாபாத்திரங்கள் செய்ய ஆசை??
எல்லா நடிகர்களுக்கும், பலமும் இருக்கும் பலவீனமும் இருக்கும். எனது பலம் முதலில் எனது பலமானஉடல்மொழியும் உருவமும். அதனால் ஒரு ஸ்டைலான வில்லனாகவோ, கார்பரேட் வில்லனாகவோ என்னால்நடிக்க முடியும் என்று பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள். அது போன்ற கதாபாத்திரங்களை செய்ய நான்ஆர்வமாக இருக்கிறேன். போலீஸ் இல்லாத வில்லன் கதாபாத்திரங்களையும் என்னால் எளிதாக கையாளமுடியும். ஆனால் இதை தாண்டி எனக்கு டார்க் காமெடி நன்றாக வரும், ஆனால் அதை காட்டும் வகையில்எனக்கு கதாபாத்திரங்கள் அமையவில்லை. அது போன்ற கதாபாத்திரம் எனக்கு அமைந்தால், மக்களும்என்னிடம் இருந்து ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறுவார்கள். ஒரு நடிகராக அனைத்துகதாபாத்திரங்களுக்கும் சென்று அதை சிறப்பாக கையாள வேண்டியது நமது கடமை. அதனால் எந்தகதாபாத்திரம் என்றாலும் அதில் எனது முழு திறமையையும் காட்ட நான் ஆர்வமாக இருக்கிறேன். “
தமிழ் தாண்டி மலையாளம், இந்தியில் நடிக்கிறீர்கள். ஒரு நடிகராக வெவ்வேறு மொழிகளில் நடிப்பதுஉங்களுக்கு என்னவிதமான உணர்வுகளை கொடுக்கிறது?
ஒவ்வொரு மொழியிலும் திரையாக்கத்திலயே வித்தியாசம் இருக்கிறது. திரைப்படம் எடுக்கும்அணுகுமுறையிலும் வித்திசாயம் இருக்கிறது. இந்தியில் அதிக புரொபசனிலிசம் இருக்கும், கேரவனில் சீன்பேப்பர் நாம் வருவதற்கு முன்னரே இருக்கும். மலையாள சினிமா அதில் இருந்து மாறுபட்டு இருக்கும். தமிழ்சினிமா முற்றிலுமாக வேறு மாதிரி இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
மற்ற மொழிகளிலும் நீங்களே டப் செய்கிறீர்கள் அது பற்றி கூறுங்கள்?
மலையாளம் எனது தாய் மொழி என்பதால் அது எனக்கு சரளமாக வரும். அதோடு தமிழ், ஹிந்தி மொழியும்எனக்கு தெரியும் என்பதால் நானே குரல் கொடுக்கிறேன். ஆனால் நான் எனக்கு குரல் கொடுப்பதை தாண்டிபலர், எனது குரல் சிறப்பாக இருப்பதாக கூறி, என்னை மற்ற நடிகர்களுக்கும் டப்பிங்க் பேச கேட்பார்கள். கார்பரேட் கதாபாத்திரங்கள் பல மொழிகள் பேசும் கதாபாத்திரமாக இருக்கும். அந்த கதாபாத்திரங்களுக்குநான் டப்பிங்க் கொடுத்தால், அது சிறப்பாக இருக்கும் என்று பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள். ஆனால்நான் டப்பிங்க் யூனியன் மெம்பர் இல்லை. அதில் இணைந்த பின்னர் தான் என்னால் அதிகாரபூர்வமாக மற்றதிரைப்படங்களுக்கு குரல் கொடுக்க முடியும். இந்த வருடத்தில் அதை செய்யவும் ஆசைபபடுகிறேன்பார்க்கலாம்.
மிகப்பெரிய கதாபாத்திரங்கள் அமையவில்லை என்று யோசித்து இருக்கிறீர்களா?
ஆம்.. அந்த வருத்தம் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் நடிகர்கள் வாழ்க்கை கிரிக்கெட்டர் உடைய வாழ்க்கைபோல தான். ஒரு கிரிக்கெட்டர் உடைய வாழ்க்கையை டெஸ்ட் தான் மாற்றும். அதுபோல நிறையகதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் போது, ஒரு நாள் எனக்கான திரைப்பட டெஸ்ட் வாய்ப்பு எனக்குகிடைக்கும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் அதிக கவனத்தை ஈர்க்கும் என்று நினைத்து, ஆனால் அதை அடையாத கதாபாத்திரங்கள் எவை?
சுந்தர் சி, ஜெய் சார் நடித்த பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஜெய் சார் உடைய அப்பா கதாபாத்திரத்தில்நடித்தது. அது ஒருவித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தது.
நீங்கள் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படங்கள்?
பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை உடைய அடுத்த படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைபோய் கொண்டு இருக்கிறது. அடுத்து நடிகர் ரகுமான் சார் உடைய நடிப்பில் உருவாகவிருக்கும் ஒரு பான்இந்திய வெப் தொடரில் நடிப்பதற்கான ஒப்பந்த வேலைகள் போய்க்கொண்டு இருக்கிறது. அதுபோக இன்னும்சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் போய் கொண்டு இருக்கிறது.
ஸ்ட்ரியோடைப்பால் சினிமா எதை இழக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
ஒரு குறிப்பிட்ட நடிகரை ஸ்ட்ரியோடைப் செய்யாமல், அவருக்கு என்ன திறமை இருக்கிறது என்று கண்டறிந்து, அவருக்கு தகுந்த கதாபாத்திரத்தை கொடுத்தால் முழு திரைப்படமுமே ஒரு வித்தியாசமான அனுபவமாகதெரியும், சிறப்பாகவும் வரும். இன்னும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாய்ப்பு இருக்கிறது. இப்போதுஇருக்கும் புதுமுக இயக்குனர்கள், ஸ்ட்ரியோடைப்–யை தவிர்த்து நடிகர்களுக்கு அவரது திறமைகளுக்கு ஏற்றவாறு கதாபாத்திரத்தை அமைத்து கொடுத்தால், சிறந்த நடிகர்களை தேர்வு செய்த திரைப்படமாக அதுஅங்கீகரிக்கப்படும்.