மறைந்து கிடக்கும் தமிழனின் வரலாற்றுப் படம் ‘நந்திவர்மன்’

ஏகே பிலிம் பேக்ட்ரி த்கயாரிப்பில் ஜிவி பெருமாள் வரதன் இயக்கத்தில் சுரேஷ்ரவி, ஆஷா வென்கடேஷ், நிழல்கள் ரவி, போஸ் வெங்கட்,  நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்நந்திவர்மன்ஆயிரம் ஆண்டுகளிக்கு முன் பல்லவ மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட செஞ்சியின் ஒரு பகுதியை ஆண்ட அரசன் நந்திவர்மனின் வரலாறை கதையாக்கியுள்ளார் இயக்குநர் பெருமாள் வரதன். பூமிக்குள் புதைந்து கிடக்கும் சிவன் கோயிலையும் புதையலையும் கண்டறிய தொல்லியல்த்துறை அதிகாரிகள் நிழல்கள் ரவியும் போஸ் வெங்கட்டும் ஆராய்கிறார்கள். புதயலை எடுப்பதற்காக சில நரபலிகளும் நடக்கின்றன. புதையல் கிடைத்ததா இல்லையா என்பதை சொல்லுவதைவிட தமிழனின் வரலாறை சொல்ல வேண்டும் என்பதையே குறிக்கோளாக காண்பித்திருக்கிறார் இயக்குநர். சுவாரஸ்யத்திற்காக  கடிவாளம் இல்லாத கற்பனைக் குதிரையையும் இடையிடையே ஓடவிட்டிருக்கிறார். (நந்திவர்மனின் வாள் கண்ணுக்கு தெரியாது.ஆனால் கைப்பிடி மட்டும் கண்ணுக்கு தெரியும் என்கிற அமானுஷிய சக்திகள் வரலாறுக்கு பொருந்தாது) காவல்த்துறை அதிகாரியாக வரும் நாயகன் சுரேஷ்ரவியின் நடிப்பு அபாரம். ஆஷா வெங்கடேஷ் அழகாக நடித்துள்ளார்.  நிழல்கள்ரவியும் போஸ்வெங்கட்டும் தங்களது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.