ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது விமர்சனம்

அக்ஷயா பிகசர்ஸ் தயாரிப்பில் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் சத்தியமூர்த்தி, விஜயகுமார் ராஜேந்திரன், கோபி, சுதாகர் ஜெயராமன், முனிஷ்காந்த், ஜார்ஜ் மரியான், ரித்விகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது“.  இது ஒரு பேய் படம். நகைச்சுவைக்காக தயாரித்துள்ளார்கள். ஒரு திரையரங்கத்திற்குள் ஒருவர் பின் ஒருவராக ஐந்தாறு பேர் வருகிறார்கள். திரையரங்கத்திற்குள் அழவதும் சிரிப்பதும் அதட்டுவதுமாக ஒரு அமானுஷ்ய குரல் ஒலிக்கிறது. இதனால் உள்ளே சென்றவர்களால் திரையரங்கத்தை விட்டு வெளியேற முடியவில்லை உள்ளே ஒழிந்து (மறைந்து) கொள்ளவும் முடியவில்லை. உள்ளே வந்தவர்கள் யார்? எப்படி வெளியேறுகிறார்கள் என்பதுதான் கதை. பேயாக வருபவர்களுக்கு பேய் உருவம் இலலை. ஜீன்ஸ் பேண்டும் டி சர்ட்டுமாக பேய்கள் வருகிறது. இசையில்தான் படம்நகர்கிறது. நகர்கிறது. இல்லாத ஒன்றை இருப்பதாக சித்தரிக்கும் கற்பனைக்கு இலக்கணம் தேவையில்லை என்ற ரீதியில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர்.  நடித்த அனைவரும் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார்கள்.