தெருக்கூத்து கலைஞர்களால் துவக்கப்பட்ட திரைப்படம் “அலங்கு”. இத்திரைப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி திரைக்க் வருகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் தயாரிப்பாளர் சங்கமித்ரா சௌமியா அன்புமணி பேசியதாவது: இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்ககூடிய இயக்குனர் மிஷ்கின், தயாரிப்பாளர் அருன் விஷ்வா, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அவர்களுக்கும் மற்றும் அலங்கு திரைப்படத்தின் அனைத்து குழுவிற்க்கும் எனது மனமாற்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். “அலங்கு” என்றால் ராஜ ராஜ சோழன் காலத்தில் போர்களத்தில் உபயோகிக்ககூடிய நாய்களாகும். அப்பெயரை படத்தின் தலைப்பாக தேர்வு செய்த இயக்குனர் சக்திவேல் அவர்களுக்கு நன்றி. மேலும் ”அலங்கு” என்ற பெயர் அனவருக்கும் ஈர்க்ககூடிய பெயராக இருப்பது நெகிழ்வாக உள்ளது. எங்கள் குழுவிற்க்குள் ஏதேனும் கசப்பான சூழ்நிலை வந்தாலும் அந்த நொடியே அதை தூக்கி எரிந்துவிட்டு படத்திற்க்காக நாங்கள் ஒன்றினைந்து செயல்ப்பட்டோம். இப்படி பட்ட குழுவோடு இணைந்ந்து பணியாற்றியது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 27 ஆம் தேடி அன்று வெளியாகிறது திரையரங்கில் வந்து படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். என்று கூறினார்*********
இயக்குனர் மிஷ்கின் அனைருக்கும் மாலை வணக்கம். இயக்குனர் சக்தி வந்து என்னை அழைத்தார் . நான் உடனே வருகிறேன் என்று கூறினேன். இயக்குனர் சக்தி என்னுடைய அஞ்சாதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மிகவும் உணர்ச்சிபூர்ணமானவர் சக்தி. சினிமா பயணத்தில் இருந்து விலகி மீண்டும் சினிமாவிற்குல் வந்தார். ரொம்ப நாளைக்கு முன்பு ஒரு கதை கூறினார் நாய்களை பற்றிய கதை அது. நான் நாய்களோடு அதிகம் பழகி இருக்கிருறேன், நாய்களோடு வாழ்ந்திருக்கிறேன்.
பொதுவாகவே நான் என்னுடைய துணை இயக்குனர்களுடன் அதிகம் பேசுவது பேரன்பை பற்றியும் கருணையை பற்றியும் தான். இயக்குனர் சக்தி நாய்களை பற்றி படம் பண்ணவேண்டும் என்று விரும்பியிருக்கிறார் நிச்சயம் அதில் பெரிய கருணை இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு படம் உருவாக்கப்பட்டு அதில் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றி பெறுவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து இங்கு வந்து இன்று நம்முன் இந்த தெருக்கூத்து கலைஞர்கள் ஆடி தங்கள் திறமைகளை காட்டிய இந்த மனிதர்களுக்கு சின்னதா கை தட்டி வாழ்த்தினாளே போதும். அதுவே அவர்களுக்கான அங்கீகாரம்.
இந்த படத்தில் நியாமமும், தர்மமும் இருக்கும் பட்சத்தில் பார்வையாளர்களும், பத்திரிக்கையாளர்களும் அதை வெற்றி பெற வைப்பார்கள். கொஞ்சம் நீங்கள் கருணையோடு நடிகர்களை பார்க்க வேண்டும். இதை நான் சொல்வதற்கு அச்சம் படவில்லை அது ” கங்குவா ” படம் தான். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அந்த படத்தை பற்றி நிறைய விமர்ச்சனங்கள் வந்தது இதை கொஞ்சம் கருணையோடு நீங்கள் பார்க்க வேண்டும். சூர்யா ஒரு நல்ல நடிகர் அவருடைய அப்பா சிவக்குமார் ஒரு நல்ல நடிகர். இன்று நம்முடன் சிவாஜி கணேசன் இல்லை எம்.ஜி.ஆர் இல்லை அவர்களோடு வந்தவர் சிவகுமார் அவர் வீட்டில் இருந்து வந்தவர் சூர்யா , உடனே நீங்க கேட்கலாம் நீங்க அடுத்து சூர்யாவிற்கு கதை கூற போகிறீர்களா என்று அப்படி எல்லாம் இல்லை. நான் கருணையோடு பார்க்க சொல்கிறேன்.
சினிமா என்பது ராக்கெட் அனுப்புவது போல, அதில் ஒரு சிறிய பிரச்னை என்றாலும் வெடித்து சிதறிவிடும். அது போல தான் சினிமாவும் ஒரு 500 கலைஞர்கள் சிறு சிறு இலைகளாக சினிமாவை உருவாக்குகிறோம். சில படங்களை உருவாக்கும்போது அப்படத்தின் இயக்குனர் இறப்பின் விளிம்பிற்கு செல்கிறான். படம் நல்லா இல்லை என்று சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது ஏனென்றால் 150 ரூபாய் கொடுத்துதான் பார்க்கிறோம். ஆனால் சினிமாவை நாம்தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். சினிமா மட்டும் தான் அறத்தையும் அழகையும் நமக்கு காட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குனர் எஸ்.பி சக்திவேல் : இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி மற்றும் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் தயாரிப்பாளர் அருண் விஷ்வா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கதையின் நாயகனாக திரு குணாநிதி மற்றும் அணைத்து நடிகர்களும் தங்களின் முழு உழைப்பையும் போட்டு நடித்துள்ளார்கள் . இத்திரைப்படத்தில் “காளி” எனும் கதாப்பாத்திரதில் நடித்திருக்கும் நாய் மிகவும் சிறப்பாக ஒத்துழைத்துள்ளது. மேலும் டிசம்பர் 27 அன்று படம் வெளியாகிறது படத்தை மக்களிடையே மிகப்பெரிய வெற்றியடைய செய்யுமாறு பத்திரிக்கையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.