ஒன்றிய பாஜக அரசின், அரசியல் சட்டத்திற்கு எதிரான செயல்பாட்டின் காரணமாக , ஒன்றிய மாநிலஉறவுகள் பாதிக்கப்படுகின்றன.
பாஜக, மொழி வாரி மாநிலங்களில் நம்பிக்கை இல்லாத கட்சியாகும்.பா.ஜ.க வின் தாய் அமைப்பானஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கம் போன்றவை மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்தன. அவை, மொழிவழி தேசிய இனத்திற்கு எதிரானவை. மத அடிப்படையிலான ,பிற்போக்கான பண்பாட்டுதேசியத்தை வலியுறுத்தின.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக, இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்கமுயல்கின்றன.
இந்நோக்குடன், ஒன்றிய பாஜக அரசு , மாநில உரிமைகளை பறித்து வருகிறது. கூட்டாட்சிகோட்பாட்டுக்கு எதிராக செயல்படுகிறது .
ஆளுநர்களை , பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு எதிராக செயல்பட வைக்கிறது.
தமிழ்நாட்டில் , ஆளுநர் ஆர். என். ரவி ,தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவருகிறார் .
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தையும், அரசையும் அவமதித்து வருகிறார்.
மாநில மக்களை,பண்பாட்டை இழிவு படுத்துகிறார்.
மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் அவலம், அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய – மாநிலஉறவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
அந்நோக்கோடு, அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின்,தமிழ்நாடு மாநிலக் குழுவின்சார்பில், இன்று (01.07.2023) ,சனிக்கிழமை மாலை சென்னையில் ஒன்றிய மாநில உறவுகள் குறித்தகருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை சூளைமேடு, நுங்கம்பாக்கம் ரயிலடி அருகில்,சௌராஷ்டிரா நகர் 4 ஆவது தெருவில் உள்ள,
கரூர் வைசியா வங்கி ஊழியர்கள் கூட்டுறவு சங்க அரங்கில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநில தலைவர்கள் க.முத்தியாலுகே.சி.கோபிக்குமார் தலைமை தாங்கினர்.
மாநிலத் தலைவர் ஜி. முரளி முன்னிலை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் பிரமிளா
வரவேற்புரையாற்றுகிறார்.
தமிழ்நாடு அரசின்,மேனாள் திட்டக்குழு
துணைத் தலைவர்,
பேராசிரியர் மு.நாகநாதன் ,
ஐப்சோ மாநிலத் தலைவர் பேராசிரியர் வி.பி. ஆத்ரேயா,
,அகில இந்திய சமாதான ஒருமைப் பாட்டுக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர்கள் டாக்டர்ஜி.ஆர்.இரவீந்திரநாத், ஐ.ஆறுமுக நயினார் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநில துணைச் செயலாளர் பா.செந்தில் குமார் நன்றியுரையாற்றினார்.
கருத்தரங்கில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
# மணிப்பூரில் அமைதி திரும்பிட தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும்.
# தமிழ்நாடு மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி யை ,உடனடியாக ஒன்றியஅரசு திரும்பப் பெற வேண்டும்.
# அரசியல் சட்டத்திற்கு எதிராக ,மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய மோடி அரசுசெயல்படுவதை கைவிட வேண்டும்.கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து செயல்பட வேண்டும்.
# மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி, ஜூலை 11 அன்று ,சென்னையிலும், தமிழ்நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திடவேண்டும்.
# ஆகஸ்ட் 6 & 9 ஹிரோஷிமா நாகஷாகி தினத்தை முன்னிட்டு, அணு ஆயுதங்களுக்கும், போருக்கும்எதிரான இயக்கங்களை நடத்திட வேண்டும்.
# ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2 வரை அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாத்திடநடைபயணம்,கருத்தரங்கம் உள்ளிட்ட இயக்கங்களை நடத்திட வேண்டும்.
# செப்டம்பர் 21 உலக சமாதான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு இயங்கங்களை நடத்திட வேண்டும்என முடிவு செய்யப்பட்டது.
கருத்தரங்கில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவண்,
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
ஐ.ஆறுமுக நயினார்,
டாக்டர் மு.எழிலன் எம்.எல்.ஏ,
பொன்.கிருஷ்ணமூர்த்தி,
பொதுச் செயலாளர்கள்,
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம்
( All India Peace and Solidarity Organisation )
தமிழ்நாடு மாநிலக் குழு.
தொடர்புக்கு:
9940664343
9790515181