நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியீடு

 ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5, 2024 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஹைதராபாத்தில் விநியோகஸ்தர்களுடன் நடந்த  நிகழ்வின் போது படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவம் தர வேண்டும் என்பதற்காக இயக்குநர் சுகுமார் ஒவ்வொரு காட்சியையும்  படமாக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வணிகம் பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனை படைத்து ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் நடித்துள்ள இந்தப் படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை உரிமையை டி-சீரிஸ் பெற்றுள்ளது.*****