ரூட் நம்பர் 17 விமர்சனம்

டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் அபிலாஷ் ஜி தேவன் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ், அஞ்சு தண்டியா, மதன்குமார், ஹரேஸ் பிராடி, டாக்டர் அமர் ராமச்சந்திரன் ஜெனிபர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ரூட் நம்பர் 17. அடர்ந்த காட்டுப்பகுதியில் ஜித்தன் ரமேஷ் அழுக்கு உருவத்துடன், துன்புறத்துதலில்இன்பம் காணும் நபராக வாழ்ந்து வருகிறார். அந்த காட்டுக்குள் வரும் சில குறிப்பிட்ட நபர்களை கொலையும் செய்கிறார். ஏன்குறிப்பிட்ட நபர்களை மட்டும் கொலை செய்கிறார் என்பதை விவரிக்கும் படம்தான் ரூட் நம்பர் 17. வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் நடித்த ஹரேஷ் பிராடி இப்படத்தில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வில்லத்தனமான அமைச்சராக மேலோட்டமாக நடித்துவிட்டு போயிருக்கிறார். இப்படத்திற்கு கதாநாயகனும் வில்லனும் ஜித்தன் ரமேஷ்தான். உற்றுப்பார்த்தால்தான் ரமேஷ் ஜித்தன் என்று தெரியவரும். அந்தளவிற்கு வேடப்பொருத்தம் அமைந்திருக்கிறது. குகைக்குள் மாட்டிக் கொண்டு சித்ரவதையை அனுபவிக்கும் அஞ்சு தாண்டியாவின் கடின உழைப்பு தெள்ளத்தெளிவாக திரையில் தெரிகிறது. இயற்கை சூழ்ந்த காட்டுப்பகுதியை கண்முன் நிறுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரசாந் பிரனவம் பாராட்டுதலுக்குறியவர். காவல்த்துறை ஆய்வாளராக வரும் தயாரிப்பாளர் அமர் ராமச்சந்திரன் ஒருவித பதட்டத்துடனும் காட்சிக்கு காட்சி மாறாத ஒரே விதமான முகபாவத்துடனும் நடித்திருக்கிறார்.