வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஸ்ரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘அநீதி‘. சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தால் அர்ஜுன் தாஸ்சுக்கு, தவறுசெய்பவர்களை பார்த்தால் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்நிலையில் சாந்தா தனஞ்செயன் வீட்டில் வேலை பார்க்கும் துஸ்ரா விஜயனை காதலிக்கிறார். சாந்தாதனஞ்செயனின் மகள் வனிதா விஜயகுமார், மகன் அர்ஜுன் சிதம்பரம் இருவரையும் அர்ஜுன் தாஸ்கோரமாக வெட்டி கொலை செய்கிறார். ஏன் இவர்கள் கொல்லப்படுகிறார்கள்?. ஏன் அர்ஜுன் தாஸ்கொலைகாரனாக மாறுகிறான் என்பதுதான் கதை. கதையின் போக்கில் நீதியை நிலை நிறுத்துகிறார்இயக்குநர் வசந்த பாலன். கொலை செய்யும் போதும், காவலர்களால் பிரம்படி வாங்கும்போது அமைதிகாப்பதிலும், காதலியை நினைக்கும்போது முகமலர்ச்சியை வெளிக்காட்டுவதிலும், என்னை கொன்றுவிடுஎன்று காதலி துஸ்ரா விஜயன் மண்டியிட்டு அழும்போது, கருணை காட்டுவதிலும் அர்ஜுன் தாஸ்அற்புதமாக நடித்திருக்கிறார். காளிவெங்கட் தான் அடிவாங்குவதை மகன் பார்க்க கூடாது என்பதற்காகஅடியின் வலியை மறைத்துக் கொண்டு சிரித்து சமாளிக்கும் காட்சியில் நமது கண்கள் ஈரமாகிறது. காளிவெங்கட் நடிக்கவில்லை, மனிதர் வாழ்ந்திருக்கிறார்.