இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற பேரவை கூட்டத்தின்போது, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கத்தில் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு முழு திருவுருவ சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும் என்று அறிவித்ததற்கிணங்க, அச்சரப்பாக்கத்தில் சர்வே எண் 314/41-ல் 0.40.50 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.2,17,74,909/-க்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.

திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு மண்டப கட்டடம் 400 சதுர மீட்டர் (4300 சதுர அடி) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு நினைவு மண்டப கட்டடத்திற்கு அலங்கார வேலைகள் மற்றும் ஸ்தபதி பணிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் நடைபாதை, ஆழ்துளை கிணறு, பார்வையாளர்களின் பயன்பாட்டிற்கான கழிவறை வசதிகள் ஆகியவைகளும் செய்யப்பட்டுள்ளன.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் இருந்து 27.02.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு மண்டபத்தினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திவான் பகதூர்  திராவிடமணி திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளினை வரும் ஆண்டுகளில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 24.06.2024 அன்று சட்டசபையில் அறிவித்ததற்கிணங்க, இன்று (07.07.2024) திவான் பகதூர்  திராவிடமணி திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 165 வது பிறந்த நாளினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன்  அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, திவான் பகதூர்  திராவிடமணி திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், திராவிடமணி திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மின்னணு விளம்பர திரையில் ஒளிபரப்பப்பட்டு வருவதை அனைவரும் பார்வையிட்டு அறிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அச்சரப்பாக்கம் மார்வார் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திவான் பகதூர் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து, வனத்துறை, வேளாண்மை துறைகளின் சார்பில் நினைவு மண்டப வளாகத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அவரைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் நினைவு மண்டப வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி, அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு.கண்ணன், அச்சரப்பாக்கம் பேரூராட்சித் தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.