ஆகஸ்ட் 16, 1947′ படத்தின் பதாகை வெளியீடு

கெளதம் கார்த்திக் நடித்துள்ள இந்தப் படத்தின் புதிய பதாகையை  படக்குழு குடியரசு தினத்தன்று வெளியிட்டுள்ளது.ஆர். முருகதாஸ் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக  வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றி இந்தக் கதை கூற இருக்கிறதுஒரு சுதந்திர சகாப்தத்தைப் பற்றிய கதையானஆகஸ்ட் 16, 1947’ படத்தில் ஒரு சிறிய கிராமம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வாழ்வையே அசைத்துப் பார்த்ததுஅப்படியான இந்தக் கதையின் பதாகை குடியரசு தினத்தன்று வெளியாகி மேலும் சிறப்பாக்கியுள்ளது.*********

பர்பிள் புல் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும்ஆகஸ்ட் 16, 1947′ படத்தை .ஆர். முருகதாஸ் புரொடக்சன்சார்பில் .ஆர். முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின்இணைத் தயாரிப்பாளர் ஆதித்ய ஜோஷி ஆவார். கெளதம் கார்த்திக், புகழ் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தக்கதையை NS பொன்குமார் இயக்கி இருக்கிறார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.