“நான் இசையமைத்த முதல் பேய் திரைப்படம் –  ” பி. 2 – இருவர் ” தான்  – தேவா

அறம் புரடக்சன்ஸ்  நிறுவனம் சார்பில், P. ராமலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் சிவம் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில், ஒரு அருமையான கமர்ஷியல் திரில்லர் ஹாரராக உருவாகியுள்ளதிரைப்படம் “P 2 – இருவர்”.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்இசையமைப்பாளர் தேவா பேசியதாவது: என்னை வாழ்திப்பேசிய அனைவருக்கும் நன்றி. இதுவரை எவ்வளவோ படங்களுக்கு இசையமைத்துவிட்டேன் இதுவரை ஒரு பேய்  படத்திற்கு கூட நான் இசையமைக்கவில்லை. அந்த குறையை இந்த படம் போக்கியது. இந்த வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் ராமலிங்கத்திற்கு நன்றி. இயக்குநர் சிவம்படம் அற்புதமாக எடுத்துள்ளார். நான் இசையமைக்க பத்து நாள் ஆனது. அதற்கு ஒத்துழைத்ததயாரிப்பாளருக்கு நன்றி. வெற்றி வெகு அற்புதமாகக் காட்சிகளைப் படம்பிடித்துள்ளார். சினேகன்எப்போதும் கலக்கிவிடுவார். நான் சூப்பர் சிங்கரை வைத்துத் தான் பாட வைத்துள்ளேன். அப்படியேநானும் யூத்தாக மாறிக்கொள்கிறேன். எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள் மகிழ்ச்சி.  படத்தில் காட்சி இருந்தால் தான் மியூசிக் நன்றாக வரும். எல்லோரும் இஷ்டப்பட்டுக்கஷ்டப்பட்டுள்ளனர். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் நன்றி. ******

தயாரிப்பாளர் இராமலிங்கம் பேசியதாவதுஇது என் முதல் படம், சின்ன வயதிலிருந்து நிறையப் படம் பார்ப்பேன். நட்பு மூலம் இந்த படம்எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனுபவம் இல்லையே என எல்லோரும் கேட்டார்கள், தேவா சார்வந்தது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. சினேகன் சார் வந்தது இன்னும் நம்பிக்கை வந்தது. இயக்குநர் சிவமும், கேமராமேன் வெற்றியும் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தனர். படத்தைச் சிறப்பாகஎடுத்துத் தந்தார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி