நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜி. சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா‘ எனும் திரைப்படத்தில் அவர் மட்டுமே நடித்திருப்பதாகவும், வித்தியாசமான முறையில் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ‘விருகம்‘ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜி. சிவா இயக்கி தயாரித்து கதையின் நாயகனாக அவர் மட்டுமே நடித்திருக்கும் திரைப்படம் ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா‘. ஓகிரெட்டி சிவக்குமார் மற்றும் அருண் சுசில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணிசேகரன் செல்வா இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை ஜே பி அரவிந்த் கவனிக்க கலைஇயக்கத்தை சந்துரு மேற்கொண்டிருக்கிறார். கொலை திகில் பாணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அர்த்தநாரீஸ்வரா மீடியா ஒர்க்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பால ஞானசுந்தரம் தயாரித்திருக்கிறார்.இணை தயாரிப்பு சாய் பாபா பிக்சர்ஸ் ********
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், இப்படத்தில் அண்மைய காலகட்டங்களில் நடைபெற்ற குற்றசம்பவங்களை மையப்படுத்தி சுவாரசியமான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒருகதாபாத்திரம் நடித்திருந்தாலும் அவரும் எதிரிகளுடன் சண்டை போடும் வித்தியாசமான சண்டை காட்சிஇடம் பெற்றிருக்கிறது. படத்தின் உச்சகட்ட காட்சியை யாரும் யோசிக்க முடியாத வகையில்அமைத்திருக்கிறோம். இந்தப் படத்தில் சிவபெருமான் திரையில் தோன்றுவது… பார்வையாளர்களுக்குவியப்பை தரும். பழிக்கு பழி வாங்கும் கதையாக இருந்தாலும்.. ஒரே ஒரு கதாபாத்திரத்தின் கோணத்தில்பொழுதுபோக்கு அம்சங்களுடன் ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை வெயிட்டுடா‘ படத்தை உருவாக்கிஇருக்கிறோம். இது நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.