மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட், ஆர். விஜயகுமார் தயாரிபில் குமரவேலன் இயக்கிய படம் “சினம்”. நேர்மையான சப்-இன்ஸ்பெக்டர் அருண் விஜய், கதாநாயகி பால் லால்வானியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர் வேலை பார்க்கும் பகுதியில் இளம் பெண்களையும் சிறுமிகளையும் கடத்தி கற்பழித்து கொலை செய்யும் கும்பல் இவரது மனைவி பால் லால்வானியும் கற்பழித்து கொலை செய்து விடுகிறார்கள். அவரின் பிணத்தின் அருகில் வேறு ஒருவரின் ஆண் பிணமும் கிடக்கிறது. இந்த கொலையாளிகளை கண்டுபிடிப்பதுதான் கதை. பழிவாங்க கோபம் ஒன்றுதான் மூலதனம் என்பதை இயக்குநர் குமரவேலன் சொல்லியிருக்கிறார். கோபத்தின் கொப்பளங்கள் வெடிப்பதை, அருண் விஜய் தனது முகத்தில் காட்டியிருப்பது மெய் சிலிர்க்க வைக்கிறது. **********
அருண் விஜய்யின் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பாலக் லால்வானி சில காட்சிகளே வந்தாலும் அவருடைய பணியை சிறப்பாக செய்துள்ளார். ஏட்டையாவாக நடித்திருக்கும் காளி வெங்கட் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.