மூன்று கோணங்களில் நடக்கும்  காமெடி கலந்த காதல் கதை  “சுவீட்டி நாட்டி கிரேசி”

அருண் விசுவல்ஸ்  என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரிக்கும் படத்திற்கு  ” சுவிட்டி நாட்டி கிரேசி” என்று இளமை ததும்பும் கலகலப்பான பெயரை வைத்துள்ளனர்.ெற்றிப்படமான உளவுத்துறை படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன்  மற்றும் பல படங்களில்இணை இயக்குனராக பணியாற்றிய ஜி.ராஜசேகர் இந்த படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பான் இந்தியபெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோலிசோடா, கடுகு, சண்டிவீரன் போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தபடத்திற்கு இசையமைக்கிறார்

எடிட்டிங் – K. குமார் பாடல்கள் –  சினேகன், பாஸ்கர்  ஜெயகுமார் கலை இயக்குனராக பணிபுரிகிறார். நடனம்ராதிகா மக்கள் தொடர்புபுவன் செல்வராஜ்  R. அருண்  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – G.ராஜசேகர்  தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற படங்களில் நடித்த த்ரிகுண்  இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், சாம்ஸ்,மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஆளி, ரகு பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். மூன்று வெவ்வேறு விதமான காதலை மையமாக வைத்து மூன்று  கோணங்களில் நடக்கும்  முழுக்கமுழுக்க காமெடி கலாட்டாதான் இந்த படம். இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக இருக்கும். படம் பார்க்க வரும் அனைவரும் துவக்கம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள்நோக்கம். அப்படியான காமெடி சரவெடியான திரைக்கதை இது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். ஹைதராபாத்,கோவை, கோத்தகிரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு  நடைபெற்றுள்ளது. தற்போதுஇறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் விருவிருபாக நடைபெற்று வருகிறது என்றார் இயக்குனர் G. ராஜசேகர்.