“குழந்தைகள் முன்னேற்ற கழகம்” திரைப்பட விமர்சனம்

அருண்குமார் சம்பந்தம் மற்றும் ஷங்கர் தயாள் ஆகியோரின் தயாரிப்பில் சங்கர் தயாள் இயக்கத்தில் செந்தில், யோகிபாபு, பருத்திவீரன் சரவணன், சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைய்யாபுரி, கம்பம் மீனா, இமயவர்மன், அட்வைத் ஜெய் மஸ்தான், ஹரிகா கோயிலம்மா, பவாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “குழந்தைகள் முன்னேற்ற கழகம்”. அரசியல்வாதியான யோகிபாவுக்கு இதண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு பிறந்த மகன் இமயவர்மனும் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் அட்வைத் ஜெய் மஸ்தானும் அமைச்சர் செந்தில் நடத்தும் பாடசாலையில் படிக்கிறார்கள். பாடசாலைக்கு மாணவர் தேர்தலை தலைமை ஆசிரியர் சித்ரா லட்சுமணன் அறிவிக்கிறார். அண்ணன் இமயவர்மன் மாணவர் தலைவர் தேர்வுக்கு போட்டியிடுகிறர். அண்ணனை தோற்கடிக்க தம்பி பல சூழ்ச்சிகளை செய்கிறார். பாடசாலை அரசியல் களமாக மாறுகிறது. இதில் யார் வென்றார்கள் என்பதுதான் கதை. குடும்ப அரசியலை இப்படத்தின் மூலம் விவரிக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள். பாடசாலைகளில் வாங்கப்படும் நன்கொடைகளையும் கட்டணங்களையும் பற்றி படம் பேசுகிறது. பாடசாலையில் அரசியல் சூழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. அண்ணன் தமிழக முதலமைச்சராகவும் தம்பி இந்திய பிரதமராகவும் அப்பா யோகிபாபு இந்திய ஜனாதிபதியாகவும் எப்படி பதவிக்கு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து படமாக்கியுள்ளார் இயக்குநர் சங்கர் தயாள். இரண்டு மணி நேரம் பொழுதுபோக்கிவிட்டு வரலாம். அரசியலை சொல்ல சிறுவர்கள்தான் கிடைத்தார்களா?.

மதிப்பீடு 5க்கு 3.