அருந்தவம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் விஇசட் துரை இயக்கத்தில் சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பிராமையா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘தலைநகரம் 2. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என் மூன்று சென்னைகளையும் மூன்று ரவுடிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அராஜகம் செய்கிறார்கள். ரவுடியாக இருந்த சுந்தர் சி மனம் திருந்தி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஆனால் அந்த மூன்று ரவுடிகளும் சுந்தர் சியின் தொழிலில் தலையிடுகிறார்கள். இதனால் மீண்டும் சுந்தர் சி ரவுடியாக களம் இறங்குகிறார். இதுதான் கதை. சுந்தர் சியின் வழக்கமான சுறுசுறுப்பும்கலகல பேச்சும் இந்த படத்தில் எங்கும் காணவில்லை. இறுகிய முகத்துடனே எப்போதும்காணப்படுகிறார். இதை அவரது ரசிகர்கள் ஏற்பார்களா? என்பது சந்தேகமே. ரத்தகறை படிந்ததலைநகரம் 2 மூன்றாம் பாகத்திற்கும் செல்லவிருக்கிறது