எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அருள் செழியன், இப்படத்தின்மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசைஅமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பைமேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.******
வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள்மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் போஸ்டர், டீஸர், டிரைலர் மற்றும் பாடல்களைபடக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். நவம்பர் மாதம் குய்கோ படத்தை வெளியிட இருக்கிறார்கள்.