மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலக வேந்தன் இளைய தமிழவேள் ஆதி. குமணன் அவர்களின் துணைவியார் திருமதி இந்திராவதி பாய் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68. ஆதி. குமணன் – இந்திராவதி பாய் இணையருக்கு அருண்குமார் என்ற மகனும் இருக்கிறார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட திருமதி இந்திராவதி பாயின் உடல்நிலை மோசமடைந்தது. சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அவர் கோமா நிலைக்குச் சென்றார் என்று அவரின் உறவுக்காரர் இந்திரன் தெரிவித்தார். கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரை அவரின் அண்ணன் மகள்களான தேசிக்கா பாய், பிரபாவதி பாய் ஆகியேர் கவனித்துக் கொண்டனர் என்றும் இந்திரன் சொன்னார்.