கங்குவா’ படத்திற்கு சூர்யா ‘ஆத்னா’ ஸ்டுடியோவில் பின்னணிக்குரல் பேசினார்

நடிகர் சூர்யா வரவிருக்கும் தனதுகங்குவாபடத்துக்கான பின்னணிக் குரலை  தயாரிப்பாளரான கே.ஞானவேல்ராஜா அமைத்த உலகத் தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவான ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவில் தொடங்கினார். இந்த ஸ்டுடியோவை ஞானவேல்ராஜா தனது மகளின் பெயரில் தொடங்கியுள்ளார்.  திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாககங்குவாஉள்ளது. இணையற்ற தயாரிப்பு மதிப்பு, திறமையான நடிகர்கள் என படத்தில் ஒவ்வொரு விஷயம் கவனமாகவும. கச்சிதமாகவும் செதுக்கப்பட்டுள்ளது.  நிச்சயம் நடிகர் சூர்யாவின் சினிமா பயணத்தில் மிகச்சிறந்தப்படைப்பாக இந்தப் படம் இருக்கும். ஸ்டுடியோ கிரீன் கே.. ஞானவேல் ராஜா படத்தைத் தயாரிக்க, இயக்குநர்சிறுத்தைசிவா படத்தை இயக்கியுள்ளார்.********

அசத்தலான லொகேஷன், ஆடம்பரமான செட் மற்றும் பிரம்மாண்டமான புரொடக்‌ஷன் டிசைனைகங்குவாகொண்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போதுஒட்டுமொத்த படக்குழுவினரும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், நடிகர் சூர்யாகங்குவாபடத்தில் தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை தயாரிப்பாளர் கே.. ஞானவேல்ராஜா, தனது அன்பு மகள் பெயரில் தொடங்கியுள்ள ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவில்தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோ உலகத்தரத்தில் அமைந்துள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர்மத்தியில் எதிர்பார்ப்பு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த படம் நாடு முழுவதும்உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் பல மொழிகளில் வெளியாகிறது. சிறப்பான சினிமாஅனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும் என ரசிகர்களுக்கு படக்குழு உறுதி கொடுக்கிறது. கங்குவாபடத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்க, பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாகநடித்துள்ளார். ’அனிமல்படத்தில் தனது நடிப்பிற்காகப் பாராட்டுகளைப் பெற்ற பாபி தியோல் இதில்வில்லனாக மிரட்டலான நடிப்பைக் கொடுத்துள்ளார். இதுமட்டுமல்லாது நடிகர்கள் நடராஜன்சுப்ரமணியம், யோகி பாபு மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.  ஐகானிக் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி இருக்கும் சார்ட்பஸ்டர்பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். அவர்தான் இந்தப் படத்திற்கும்இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.