இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மியூசியம் ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்களாலும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல பெருமை வாய்ந்த படங்களின்படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது. ரஜினிகாந்த் இந்த மியூசியத்துக்கு வருகை தந்ததுடன், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் எம்எஸ் குகன் ஆகியோருடன் இணைந்து மியூசியத்தை சுற்றிப்பார்த்தார்..