பேய் ராஜ்ஜியத்தை கூறும் படம் “டிமாண்டி காலனி 2”

-ஷாஜஹான்-

பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்பிரமணியன், ஆர்.சி.ராஜ்குமார் ஆகியோரின் தயாரிப்பில் அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானிசங்கர், அருண்பாண்டியன், ஆண்டி ஜாஸ்கெலைன், டிசெரிங் டோர்ஜி, முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலிட், அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டிமாண்டி காலனி 2”. பேய் படங்களிலே இந்த படம் மிக வித்தியாசமானது. பிரியா பவானிசங்கரின் கணவர் இறந்து விடுகிறார். அவரது நிறைவேறாத ஆசைகள் என்ன என்பதை அறிந்துவர ஆவிகளின் உலகத்திற்கு செல்ல பிரியா பவானிசங்கர் விரும்புகிறார். ஆவிகளின் உலகத்திற்கு சென்றுவர ஒரு மந்திரவாதியின் உதவியை நாடுகிறார். மந்திரவாதியும் உனது ஆத்மாவை ஆவிகள் உலகத்திற்கு அனுப்புகிறேன். அங்கே உன் கணவவரை பார். அங்கே உனக்கு ஆபத்து நடந்தால் அதை என்னால் உணரமுடியும். உடனே திரும்ப வந்துவிடு என்று கூறுவேன். எனது சத்தம் உனக்கு கேட்கும். உடனே நீ வந்துவிட வேண்டும். வராவிட்டால் அங்கேயே தங்கிவிடுவாய் என்ற நிபந்தனையுடன் பிரியா பவானிசங்கரின் ஆத்மாவை ஆவி உலகத்திற்கு அனுப்புகிறார் மந்திரவாதி. பிரியா திரும்பி வந்தாரா? இல்லையா? முதல் பாகத்தில் இறந்ததாக காட்டப்பட்ட அருள்நிதி இரண்டாம் பாகத்தில் எப்படி உயிருடன் வந்தார்? முதல் பாகத்தில் காணாமல் போன பேய் மன்னனின் தங்கச்சங்கிலி இரண்டாம் பாகத்தில் கிடைத்ததா? உண்மையான பேய் யார்? என்பதுதான் இபடத்தின் கதை. பேயாகவும் மனிதனாகவும் நடித்திருக்கும் அருள்நிதி பேய்க்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசத்தை தனது நடிப்பால் வேறுபடுத்திக் காட்டியிருப்பது அபாரம். பிரியா பவானிசங்கர் படம் முழுக்க அதிர்வுக்கு ஆளாகியிருப்பதும் அழகாகத்தான் இருக்கிறது. ஒளிப்பதிவும் இசையும் ஆவி உலகத்திற்கே பார்வையாளர்கள அழைத்து செல்வதைப்போல் இருக்கிறது. அருண்பாண்டியனின் அமைதியான நடிப்பு ரசிக்கும்படியுள்ளது. உச்சக்கட்ட காட்சியில் கதையை வசனங்களால் விவரிப்பது மூன்றாம்பாகத்திற்கு இயக்குநர் இழுத்துச் செல்வதாக அமைந்துள்ளது.