காதலின் மகிழ்ச்சி மற்றும் வலியை இசையின் மூலம் வெளிப்படுத்தும் ‘பட்டி காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது* *வார் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் தீபா லக்ஷ்மண் பிரபு தயாரிப்பில் சத்தியசீலன் இயக்கத்தில் பிரியா மாலி இசையில் விவேக் வரிகளில் தர்ஷன், குஷி ரவி நடிப்பில் உருவாகியுள்ள உணர்ச்சிப்பூர்வ இசை ஆல்பத்தை ஏபி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது* காதலும் இசையும் இணைபிரியாதது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த வருட காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ஆல்பம் ‘பட்டி’ காதலின் உணர்வுகளான மகிழ்ச்சி மற்றும் வலியை இதயத்தை தொடும் வகையில் இசை மற்றும் காட்சிப்படுத்தி இருக்கும் ‘பட்டி’ ஆல்பத்தை வார் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தீபா லக்ஷ்மண் பிரபு தயாரிக்க சத்தியசீலன் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக்கின் வரிகளுக்கு பிரியா மாலி இசையமைத்து பாடியுள்ளார்.*********
‘கனா’ புகழ் தர்ஷன் மற்றும் ‘தியா’ புகழ் குஷி ரவி முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘பட்டி’ ஆல்பத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல ஏபி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. சுதந்திரமான பெண்ணாக வாழும் தீபா பாத்திரத்தை சுற்றி ஆல்பம் சுழல்கிறது. காதலனை பட்டி (Buddy – தோழன்) என்று அழைக்கும் அவளுக்கு பைக் ஓட்டுவது, துல்லிய ஒலிகளை கேட்பது என்றால் கொள்ளை பிரியம். காதலர்கள் இருவரும் ஏற்காட்டுக்கு பைக்கில் செல்லும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. இது அவர்களது வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டது என்பது தான் ‘பட்டி’. ‘பட்டி’ ஆல்பத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆரல் ஆர் தங்கம் படத்தொகுப்பை கையாள, பிரவீன் ஜி நடனம் அமைத்துள்ளார். வார் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் தீபா லக்ஷ்மண் பிரபு தயாரிப்பில் சத்தியசீலன் இயக்கத்தில் பிரியா மாலி இசையில் விவேக் வரிகளில் தர்ஷன், குஷி ரவி நடிப்பில் உருவாகியுள்ள உணர்ச்சிப்பூர்வ இசை ஆல்பமான ‘பட்டி’ ஏபி இன்டர்நேஷனல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது.