மூன்று மொழிகளில் தயாராகும் ‘மாஃபியா’

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களை பெங்களூரில் விநியோகம் செய்து வருபவர் குமார். இவர் முதன் முறையாக தமிழ் படத்தை தயாரிக்கிறார். படத்தின் பெயர் ‘மாஃபியா’.  இந்தப் படத்தை எச். லோகித் இயக்குகிறார். இதில் நாயகனாக பிரஜ்வால் தேவ்ராஜ் நடிக்கிறார். இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர். படம் குறித்து இயக்குநர் லோகித் கூறியதாவது : ‘‘சினிமாவுக்கு வந்த பிறகு நான் இயக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் ‘மம்மி’ மற்றும் பிரியங்கா உபேந்திரா நடித்த ‘தேவகி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளேன். கன்னடத்தில் வெற்றி பெற்ற அந்தப் படங்கள் பெரிய வெற்றியடைந்ததோடு தமிழிலும் டப் செய்யப்பட்டது. ‘மம்மி’ படத்தின் திரையரங்கு உரிமையை தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் வாங்கியிருந்தார். என்னுடைய மூன்றாவது படத்தை நேரடி தமிழ் படமாக இயக்குவதில் மிகுந்த சந்தோஷம். இதில் நாயகனாக நடிக்கும் பிரஜ்வால் தேவ்ராஜ் கன்னடத்தில் பல ஹிட் படங்களில் நடித்தவர். இந்தப் படத்தை தயாரிக்கும் குமார் கர்நாடகவில் முன்னணி விநியோகஸ்தர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களை பெங்களூரில் விநியோகம் செய்து வருகிறார். அவருடன் இதில் இணைவதில் மகிழ்ச்சி. கதையை குறித்து சொல்வதாக இருந்தால் இது மாஃபியா பற்றிய கதைகளில் சொல்லப்படாதவைகளாக இருக்கும். அத்துடன் மாஃபியா கதைகளுக்குரிய விறுவிறுப்புக்கும் ஆக்ஷனுக்கும் பஞ்சமிருக்காது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது’‘ என்றார்.

நடிகர், நடிகைகள்: பிரஜ்வால் தேவராஜ், தேவராஜ், அதிதி பிரபுதேவா, ஷைனி ஷெட்டி, வாசுகி வைபவ், ஓரட்டா பிரசாந்த். தொழில் நுட்ப கலைஞர்கள் : தயாரிப்பு நிறுவனம் : பெங்களூரு குமார் பிலிம்ஸ். தயாரிப்பு : பி. குமார்,  எச்.லோகித். இயக்கம் /கூடுதல் திரைக்கதை: எச். லோகித். இசை : ஜே. அனூப் செலின் ஒளிப்பதிவு : அனிஷ் தருண் குமார் வசனம் : மஸ்தி எடிட்டர் : சி. ரவிச்சந்திரன்  சண்டை : டிபரண்ட் டேனி, விநோத், அன்பறிவ், ரவி வர்மா நடனம் : இம்ரான் சர்தாரியா, ராஜூ சுந்தரம், அதில் சாகித், பிருந்தா, கலை. சவுண்ட் மிக்ஸ்: டி. உதயகுமார் சவுண்ட் டிசைன் : பிரதாப் வேவ் ஒர்க்ஸ் ஸ்டில்ஸ் : அபிஷேக் பிரான்சிஸ். 

மக்கள் தொடர்பு : பிரியா.