ஏ.ஆர்.ரஹ்மானுடன் பிரபு தேவாவை இணைத்த படம் ‘மூன் வாக்’

திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய  ஏ.ஆர்.ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘மூன் வாக்’ . இத்திரைப்படத்தை பிகைண்ட் உட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், நடிகர்கள் பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைவரையும் மயக்கும் வகையில் தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல் தொகுப்பு  ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.********

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படம் மிகவும் சிறப்பாக உருவாகி வருகிறது.  அனைத்து பொழுது போக்கு அம்சங்களுடன்,  நகைச்சுவை கலந்த அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் இருக்கும். இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான்-இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Behindwoods வழங்கும் இந்தத் திரைப்படத்தை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS இயக்கி வருகிறார்.மனோஜ் NS, திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் தயாரித்து வருகின்றனர். அனூப் VS ஒளிப்பதிவிற்கும், ஷானு முரளிதரன் தயாரிப்பு வடிவமைப்பிற்கும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங்கிற்கும் பொறுப்பு ஏற்று உள்ளனர்.