நடிகர் ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களை தனக்கு ரோல் மாடல் என்று புதிதாக வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் களமிறங்குகிறார் நடிகர் பிஜிஎஸ்… சென்ற மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த சிவ மாதவ் இயக்கியுள்ள ‘3.6.9’ என்ற திரைபடத்தில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் 21 வருடங்களுக்கு பிறகு கதாநாயகனாக நடித்த்துள்ள திரைபடத்தில் அறிமுக வில்லனாக பி ஜி எஸ் நடித்துள்ளார்… இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 81 நிமிடத்தில் முழு படப்பிடிப்பும் நடத்தி முடித்து உலக சாதனை படைத்துள்ளது. இதில் மிக நீண்ட வசனத்தை நடிப்புடன் வெளிப்படுத்தி 3.6.9 படக்குழுவை வெகுவாக கவர்ந்தார் பிஜிஎஸ்…. இவர் தமிழ் சினிமாவில் ரகுவரன், பிரகாஷ் ராஜ் போன்றவர்களை போல் சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்சுமார் ஆறு பக்கங்கள் கூடிய வசனத்தை பேசி நடித்தது தனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்றவர் தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்