துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் 1.34 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் ரூ.65 லட்சம் மதிப்புள்ள 1.34 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். கொச்சின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அளித்த உளவுத் தகவல் அடிப்படையில், துபாயில் இருந்து எமிரேட்ஸ விமானத்தில் இன்று அதிகாலை 2.20 …

துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் 1.34 கிலோ தங்கம் பறிமுதல் Read More

கொடநாடு பங்களாவில் ஆதாரங்களை திரட்டிய போலீசார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடுபங்களாவில் நடந்தகொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் சயானிடம் மறு விசாரணை, கனகராஜ்சகோதரிடம் விசாரணை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் கொடநாடு எஸ்டேட்மேலாளர் என பலரிடமும் போலீசார் மேற்கொண்டு வரும் …

கொடநாடு பங்களாவில் ஆதாரங்களை திரட்டிய போலீசார் Read More

சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்ட 1 பழையகுற்றவாளி உட்பட 3 குற்றவாளிகள் கைது.

சென்னை, மடிப்பாக்கம், ராமகிருஷ்ணராஜ் நகரைச்சேர்ந்த கீதா, பெ/வ.58, க/பெ.கபிலன் என்பவர் கடந்த19.8.2021 அன்று மாலை, வீட்டினருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, டியோ இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தங்கச்சங்கிலியைபறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து கீதா S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது. ​​S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவுஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவஇடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராபதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி சங்கிலிபறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1. ராஜேஷ் (எ) ராபர்ட், வ/23, த/பெ.வின்சென்ட், எண்.25, ஏரிக்கரை தெரு, ஜமீன்பல்லாவரம், சென்னை, 2.சிவா (எ) சிவசங்கரன், வ/26, த/பெ.ஶ்ரீராம், எண்.64, பத்மாவதிநகர் 2வது குறுக்கு தெரு, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், 3.லியோ (எ) லியோனார்டு ஜேம்ஸ், வ/28, த/பெ.டேனியல்ஜேம்ஸ், எண்.19/40, சிதம்பரம் தெரு, பாரதிபுரம், ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை, ஆகிய 3 நபர்களை கைதுசெய்தனர்.​ ​​விசாரணையில் குற்றவாளிகள் மூவரும் S-7 மடிப்பாக்கம், S-10 பள்ளிக்கரணை, S-15 சேலையூர், S-6 சங்கர் நகர் மற்றும் S-5 பல்லாவரம் ஆகிய  காவல் நிலையஎல்லைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று தனியாகநடந்து செல்லும் பெண்களின் தங்கச்சங்கிலிகளைபறித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளிகளிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும்குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 டியோ இருசக்கரவாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணையில், குற்றவாளி ராஜேஷ் (எ) ராபர்ட்மீது மடிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற காவல் நிலையஎல்லைகளில் சுமார் 10 செல்போன் பறிப்பு வழக்குகள்உள்ளது தெரியவந்தது. ​​விசாரணைக்குப் பின்னர் 3 குற்றவாளிகளும் இன்று(29.8.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றஉத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்ட 1 பழையகுற்றவாளி உட்பட 3 குற்றவாளிகள் கைது. Read More

பிரியாணிக்கு ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த வியாபாரி

சென்னையை அடுத்த பாலவாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 32). பால் மற்றும் பேப்பர் போடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பாலவாக்கம் அண்ணாசாலை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ரூ.1½ லட்சத்தை எடுத்தார். அதை தனது இருசக்கர வாகன இருக்கைக்கு …

பிரியாணிக்கு ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த வியாபாரி Read More

காவல் கரங்கள் ”  உதவி மையம் மூலம் வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

​சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த 21.04.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  “காவல் கரங்கள்” என்ற அமைப்புஏற்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “காவல் கரங்கள்” மூலம்சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஆதரவில்லாமல் சுற்றிதிரியும் மனநிலை மற்றும் உடல் …

காவல் கரங்கள் ”  உதவி மையம் மூலம் வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். Read More

எழும்பூர் காவலர் மருத்துவமனையில்புதியதாக அமைக்கப்பட்டுள்ள OxyenGenerator -Plant ஐ காவல் துறை தலைமைஇயக்குநர் திறந்து வைத்து வைத்தார்

சென்னை எழும்பூரில் இயங்கி வரும் காவலர்மருத்துவமனையில் காவல் அதிகாரிகள் ஆளினர்கள்மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவசிகிச்சை வழங்கப்படுகிறது. சென்னை பெருநகரில்முன்களப் பணியாளர்களாக பணி செய்துவரும்காவலர்களின் நலனுக்காக   சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., முயற்சியின் பேரில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்ட காவலர்கள் அவர்தம் குடும்பத்தினர்மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக காவலர்மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாகமாற்றப்பட்டு 75 படுக்கை வசதிகளுடன்  ஆக்சிஜன்செறிவூட்டிகளும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில்உள்ளது. மேலும் காவலர் குடும்பத்தைச் சேர்ந்தகொரோனா நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைவசதிகளும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது மெட்ராஸ் ரோட்டரி கிளப் நிர்வாகத்தினர் உதவியுடன் எழும்பூர் காவலர் மருத்துவமனையில்Oxygen-Plant புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழககாவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு, இ.கா. இன்று(11.08.2021) புதிதாக அமைக்கப்பட்ட Oxygen Generator Plantஐ திறந்து வைத்து பார்வையிட்டார். இதன் மூலம்காவலர் மருத்துவமனையில் உள்ள 75 படுக்கைகளில்சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றிஆக்சிஜன் கிடைக்கும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் டாக்டர்.லோகநாதன், இ.கா.ப,, எழும்பூர் காவல் மருத்துவமனை தலைமைமருத்துவர் திரு.B.சுந்தர்ராஜ், மெட்ராஸ் ரோட்டரி கிளப்President திரு.M.சீனிவாசராவ்,  மெட்ராஸ் ரோட்டரிகிளப் உறுப்பினர் டாக்டர்.வசுதா மற்றும் காவல்அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

எழும்பூர் காவலர் மருத்துவமனையில்புதியதாக அமைக்கப்பட்டுள்ள OxyenGenerator -Plant ஐ காவல் துறை தலைமைஇயக்குநர் திறந்து வைத்து வைத்தார் Read More

காவலர்களுக்கான மருத்துவ பரிசோதணை முகாமை ஆணையர் துவக்கி வைத்தார்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும்பொருட்டு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகாலத்தில் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றும் சென்னைபெருநகர காவல் ஆளிநர்களின் நலனுக்காக சென்னைபெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,  உத்தரவின்பேரில், கொரோனாவிழிப்புணர்வு முகாம்கள், மருத்துவ முகாம்கள்நடத்தப்பட்டும், கொரோனா தடுப்பு உபகரணங்கள்வழங்கப்பட்டும் பல்வேறு நலத்திட்டங்கள்செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., காவலர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் நலனுக்காக சென்னை பெருநகரில் உள்ள காவலர் குடியிருப்புகளில் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், இத்திட்டத்தின் துவக்கமாக, 04.08.2021 அன்று மதியம், கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் , இ.கா.ப., துவக்கி வைத்தார். இம்முகாமில் கண், காது, தொண்டை, இரத்த அழுத்தம், நீரிழிவு, ECG மற்றும் ECHO உள்ளிட்ட மருத்துவபரிசோதனைகள் பெற்று கொள்ளவும், பரிசோதனை மற்றும்முடிவுகள் தொடர்பான விளக்கங்கள் அளிக்க சிறப்புமருத்துவர்கள் அமர்த்தப்பட்டும், சிறிய வகைநோய்களுக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கவும்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், காவல் ஆளிநர்கள்மற்றும் அவரது குடும்பத்தினர் இம்முகாமில் கலந்து கொண்டுபரிசோதனை செய்து பயன்பெற காவல் ஆணையாளர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, கீழ்பாக்கம் காவல் குடியிருப்பில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடைபெறுகின்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவ பரிசோதனை முகாமினைசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப. அவர்கள் பார்வையிட்டு, காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இம்முகாமில், சென்னை பெருநகர காவல் கூடுதல்ஆணையாளர்கள் திரு.டி.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு), திரு.பிரதீப்குமார், இ.கா.ப., (போக்குவரத்து), வடக்குமண்டல இணை ஆணையாளர் திரு.ஏ.டி.துரைகுமார், இ.கா.ப., துணை ஆணையாளர்கள், அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த பொது மேலாளர் சாய்நாராயணன், மேலாளர் தனுஷ்கோடி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காவலர்களுக்கான மருத்துவ பரிசோதணை முகாமை ஆணையர் துவக்கி வைத்தார் Read More

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு காவல்த்துறை ஆணையர் பாராட்டு

1.இராயப்பேட்டை பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை இரவு ரோந்து பணியிலிருந்த  போலீசார்கைது செய்தனர். சென்னை, ராயப்பேட்டை, பேகம் 3வது தெரு, எண்.13 என்றமுகவரியில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்தீப், வ/20, த/பெ.அப்ரித்லால் என்பவர் வசித்து வரும் இவர் தனது இருசக்கரவாகனத்தில் டீ வியாபாரம் செய்து வருகிறார்.  சந்தீப் தனது நண்பர் தினேஷ்   உடன் சேர்ந்து கடந்த 28.07.2021 அன்று இரவு 11.30 மணியளவில் ராயப்பேட்டை, பீட்டர்ஸ்  ரோடு, சென்னை மாநகராட்சிஉருது மேல்நிலைப்பள்ளி அருகே டீ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று நபர்கள் மேற்படி சந்தீப்பிடம் பணம் கேட்டுமிரட்டியுள்ளனர். சந்தீப் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே 3 நபர்களும் மேற்படி சந்தீப் மற்றும் அவரது நண்பர் தினேஷைதாக்கிவிட்டு, சந்தீப்பிடமிருந்து செல்போன் மற்றும் ரூ.1,500/- பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். உடனே சந்தீப் அருகில்  ரோந்துவாகனத்தில் பணியிலிருந்த D-4 ஜாம்பஜார் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.ராஜாவிடம் (த.கா.31986) நடந்தசம்பவத்தை கூறியுள்ளார். தலைமைக்காவலர் ராஜா விரைந்துசெயல்பட்டு அருகில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படிசெல்போன் பறிப்பில்  ஈடுபட்ட சசிகுமார், வ/19, த/பெ.வடிவேலு, எண்.15/2, கபூர் தெரு, இராயப்பேட்டை என்பவரை கைது செய்து E-2 ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.   ​மைலாப்பூர் சரகத்தில் இரவு ரோந்து பணியிலிருந்த மைலாப்பூர்சரக உதவி ஆணையாளர் திரு.கௌதமன் மற்றும் D-5 மெரினாகாவல்நிலைய தலைமைக்காவலர் G.விஸ்வநாதன் (த.கா.18506) E-5 பட்டினம்பாக்கம் காவல் நிலைய முதல் நிலைக்காவலர்திரு.புருஷோத்தமன் (மு.நி.கா.44409) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் பிடிபட்ட சசிகுமாரிடம் விசாரணை செய்தனர். போலீசாரின்விசாரணையில் குற்றவாளி சசிகுமார் அளித்த தகவலின் பேரில் காவல் குழுவினர் சம்பவத்தன்று இரவே மேற்படி செல்போன் பறிப்புசம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான விக்கி (எ) விக்னேஷ், த/பெ.முருகன், எண்.7/4, சந்தாசாகிப் தெரு,இராயப்பேட்டை என்பவரையும் கைது செய்து E-2 ராயப்பேட்டைகாவல்  நிலையத்தில் ஒப்படைத்தனர்.    2. ஐஸ் அவுஸ் பகுதியில் குட்கா பொருட்கள் வைத்திருந்த 4நபர்கள் கைது.                             383 கிலோ குட்கா, 1 ஆட்டோ மற்றும் ரூ.21,610/- பறிமுதல். சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கானநடவடிக்கை”  (Drive Against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதைபொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், …

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு காவல்த்துறை ஆணையர் பாராட்டு Read More

கொரோனாவுக்கு பலியான காவலர்களின் உருவ படங்களுக்கு ஆணையர் அஞ்சலி

கடந்த மே, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிய சென்னை பெருநகர காவல் ஆளிநர்களில் 1.திரு.ஜெ.ஈஸ்வரன், பல்லாவரம் சரக உதவி ஆணையாளர்,  2.திரு.சி.ஜெயகுமார், மணலி போக்குவரத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் 3.ஜான் ரூபஸ்,(S–11 தாம்பரம் போக்குவரத்து கா.நி.), 4.திரு.ரவிச்சந்திரன் (நவீன கட்டுப்பாட்டறை), 5.திரு.பத்மநாபன் (T-3 கொரட்டூர் …

கொரோனாவுக்கு பலியான காவலர்களின் உருவ படங்களுக்கு ஆணையர் அஞ்சலி Read More

சென்னை பெருநகர காவல்துறையில்பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள் அறிவுரைப்படி, சென்னைபெருநகர காவல்துறையில் கொரோனா நோய் தொற்றுகாலத்தில் அர்ப்பணிப்புடன் தன்னுயிரை பொருட்படுத்தாமல்பணியாற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பல்வேறு நலத்திட்டங்கள்நடைமுறைபடுத்தப்பட்டு, முகக்கவசங்கள், திரவசுத்திகரிப்பான், கையுறை உள்ளிட்ட கொரோனா தடுப்புஉபகரணங்கள் வழங்கியும், , கொரோனா பரவாமல் தடுக்ககொரோனா விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்கள்நடத்தப்பட்டும் வரப்படுகிறது.   ​அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுபெங்களூரில் இயங்கி வரும் Sillicon Valley Bank (SVB) நிர்வாகத்தினர், கொரோனா தொற்று காலத்தில் மிகுந்தஅர்ப்பணிப்புடன் களப்பணியாற்றி வரும் சென்னை பெருநகரகாவலில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர் மற்றும் அவரதுகுடும்பத்தினருக்கு N95 முகக்கவசங்கள், கையுறைகள், திரவசுத்திகிரிப்பான், ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளிட்டரூ.3,000/- மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்கள்வழங்க முன் வந்தனர். ​அதன் தொடக்கமாக, இன்று (24.7.2021), காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5,000 காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கியதொகுப்பு வழங்குவதின் அடையாளமாக சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்,15 காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குடாக்டர்.கலாநிதி வீராசாமி, வட சென்னை பாராளுமன்றஉறுப்பினர் மற்றும் Sillicon Valley வங்கியின் இந்தியமனிதவள இயக்குநர் திருமதி.ஷாலினி பொடார்முன்னிலையில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கியதொகுப்பினை வழங்கினார்கள்..  ​உடன், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்(தலைமையிடம்) முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்) திரு.மகேந்திரன், மேற்படிதனியார் வங்கி அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள்கலந்து கொண்டனர்.

சென்னை பெருநகர காவல்துறையில்பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். Read More