கூவம் ஆற்றில் குதித்த நபரை காப்பாற்றிய காவலரை ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்

1. கண்ணகிநகர் பகுதியில் உறங்கி கொண்டிருந்த அரசுபேருந்து நடத்துநரின் பையை திருடிக் கொண்டுஇருசக்கர வாகனத்தில் தப்பிய குற்றவாளியை மடக்கிப்பிடித்து, நடத்துநரின் பை மற்றும் இருசக்கர வாகனம்பறிமுதல் செய்யப்பட்டது. J-11 கண்ணகிநகர் காவல் நிலைய தலைமைக் காவலர்திரு.ஶ்ரீராமதுரை (த.கா.36425) மற்றும் ஊர்காவல்படை வீரர்திருஹரிபிரசாத் (HG5724) ஆகியோர் 12.7.2021 அன்றுஜிப்சி ரோந்து வாகனத்தில் இரவு பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 03.00 மணியளவில் (13.7.2021), ஒக்கியம்துரைப்பாக்கம், OMR சர்விஸ் சாலை, பெட்ரோல் பங்க்அருகில் சுற்றுக் காவல் மேற்கொண்டபோது, அவ்வழியேஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் காவல் வாகனத்தை பார்த்ததும், இருசக்கர வாகனத்தை திருப்பிதப்ப முயன்றபோது, காவல் குழுவினர் சத்தம் போடவே, 3 நபர்களும் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு ஓடினர். காவல் குழுவினர் துரத்திச் சென்று 3 நபர்களில் ஒருவரைபிடிக்க, மற்ற 2 நபர்கள் இருட்டில் ஓடி மறைந்துவிட்டனர். பிடிபட்ட நபரை விசாரணை செய்தபோது, அவரதுபெயர், தனுஷ், வ/18, த/பெ.சீனிவாசன், கண்ணகிநகர்குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, சென்னை என்பதும், தனுஷ் தப்பிச் சென்ற அவரது நண்பர்கள் குள்ளாபாய் (எ) சாகுல் அமீது மற்றும் தீனா ஆகியோருடன் சேர்ந்து, சற்றுமுன்பு காரபாக்கம் பேருந்து நிலையம் அருகே உறங்கிகொண்டிருந்த அரசு பேருந்து நடத்துனரின் செல்போன்மற்றும் ஆவணங்கள் இருந்த பையை திருடிக் கொண்டுஇருசக்கர வாகனத்தில் வரும்போது பிடிபட்டதும்தெரியவந்தது.  அதன்பேரில், பிடிபட்ட தனுஷ், கைப்பற்றப்பட்டஇருசக்கர வாகனம் மற்றும் பேரந்து நடத்துநரின் பைஆகியவற்றுடன் J-11 கண்ணகிநகர் காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின்னர் எதிரி தனுஷ்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்டநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது. மேலும், தப்பிச் சென்ற 2 நபர்களைபிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். 2. கீழ்பாக்கம் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டிசெல்போனை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில்தப்பிய 3 குற்றவாளிகள் கைது– 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் G-3 கீழ்பாக்கம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர்திரு.ரெஜின் (மு.நி.கா.29043) என்பவர் 12.7.2021 அன்றுஇரவு ரோந்து பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் டெய்லர்ஸ்சாலை சந்திப்பு அருகே வரும்போது, கார்த்திக் என்பவர்சற்று முன்பு இவ்வழியே சென்றபோது, இருசக்கரவாகனத்தில் வந்த 3 நபர்கள் தன்னிடம் கத்தியைக் காட்டிமிரட்டி தனது செல்போனை பறித்துச் சென்றதாக காவலர்ரெஜினிடம் கூறினார். காவலர் ரெஜின் குற்றவாளிகளின்அடையாளங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தின் பதிவெண்மற்றும் அடையாளங்களை கேட்டறிந்து, இரவு ரோந்துபணியிலிருந்த தலைமைக் காவலர் பென் அரவிந்த் சாம்(த.கா.27873) மற்றும் முதல்நிலைக் காவலர்திரு.திருக்குமரன் (மு.நி.கா.40048) ஆகியோரை சம்பவஇடத்திற்கு வரவழைத்து, விசாரணை செய்து கீழ்பாக்கம்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 3 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.ஆதிபகவான் (எ) தாஸ், வ/24, த/பெ.சேட்டு, சென்டிரல் இரயில் நிலையபிளாட்பாரம், 2.ராஜேஷ் (எ) கோவிந்தா, வ/19, காமராஜர்தெரு, நியூ காலனி, கோயம்பேடு, 3.திவாகர் (எ) கருப்பு, வ/24, த/பெ.அந்தோணிசாமி, நேரு நகர் நியூ காலனி, கோயம்பேடு என்பதும், சற்று முன்பு மூவரும் சேர்ந்து ஒருஇருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வரும் வழியில்கீழ்பாக்கம் பகுதியில் கார்த்திக்கிடம் கத்தியைக் காட்டிமிரட்டி செல்போன் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அதன்பேரில், அவர்களிடம் இருந்து கார்த்திக்கின்செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல்செய்து, பிடிபட்ட 3 குற்றவாளிகளையும் G-3 கீழ்பாக்கம்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப்பின்னர் 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்குஉட்படுத்தப்பட்டனர். 3. நேப்பியர் பாலத்திலிருந்து கூவம் நதியில் குதித்துசேற்றில் சிக்சி தவித்த நபரை மீட்ட தமிழ்நாடு சிறப்புகாவல்படை காவலருக்கு பாராட்டு. ஆவடி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 5வது அணியில்பணிபுரிந்து வரும் காவலர் சாமிநாதன் (நாயக் எண்.7737), 22.7.2021 அன்று மதியம் சுமார் 01.45 மணியளவில், பணிநிமித்தமாக சென்னையிலுள்ள சீருடை பணியாளர்தேர்வாணையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில்நேப்பியர் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பொதுமக்கள் கூவம் ஆற்றை பார்த்தவாறு கூடியிருந்தனர்.  உடனே காவலர் சாமிநாதன் தனது இருசக்கர வாகனத்தைஓரமாக நிறுத்திவிட்டு சென்றபோது, ஒரு ஆண் நபர்நேப்பியர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்து, மார்பளவு வரையுள்ள சேற்றில் சிக்கி நகர முடியாமல்தவித்துக் கொண்டிருந்தார். உடனே, சாமிநாதன் அந்தசமயம் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்தகயிற்றை எடுத்து ஒரு முனையை பாலத்தில் கட்டி, மற்றொருமுனையில் சுருக்கு போட்டு கயிற்றை இறக்கி, பாலத்தின்பக்கவாட்டில் உள்ள கூவம் ஆற்றின் சேற்றில் சென்றுகயிற்றை அந்த நபரின் உடம்பில் மாட்டி,  பொதுமக்கள்உதவியுடன் கயிற்றை மேலே இழுத்து அந்த நபரைகாப்பாற்றினார். சேற்றுடன் மீட்கப்பட்ட நபரை பொதுமக்கள்உதவியுடன் தண்ணீர் ஊற்றி கழுவி இளைப்பாற்றிவிசாரணை செய்ததில், அவரது பெயர் கமலகண்ணன், …

கூவம் ஆற்றில் குதித்த நபரை காப்பாற்றிய காவலரை ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார் Read More

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் …

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை Read More

திருடர்களை விரட்டி பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

சென்னை பெருநகர காவல், P-3 வியாசர்பாடிகாவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர்திரு.M.D.K.சுரேஷ் குமார் (த.கா.36538), முதல்நிலைக்காவலர் M.செந்தில்குமார் (மு.நி.கா.45273), ஆயுதப்படைகாவலர் L.சிவகுமார் (கா.55075) மற்றும் ஊர்க்காவல் படைவீரர் V.சதிஷ்குமார் (HG 5592) ஆகியோர் 15.7.2021 அன்றுஇரவு வியாசர்பாடி, கள்ளுக்கடை சந்திப்பு அருகே வாகனதணிக்கை பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 01.30 மணியளவில் (16.7.2021) ஒரு நபர் இருசக்கர வாகனத்தைஓட்டிக் கொண்டே, மற்றொரு நபர் அமர்ந்திருந்தஇருசக்கர வாகனத்தை காலால் தள்ளி கொண்டுவரும்போது, காவல் குழுவினரை பார்த்ததும் இருவரும்இருசக்கர வாகனத்தை திருப்பி தப்ப முயன்றனர். உடனேகாவல் குழுவினர் துரத்திச் சென்றபோது, இரு நபர்களில்ஒருவர் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டுதப்பியோடவே, காவல் குழுவினர் மற்றொரு நபரைஇருசக்கர வாகனத்துடன் மடக்கிப் பிடித்தனர். பின்னர்பிடிபட்ட நபரையும், கைப்பற்றப்பட்ட 2 இருசக்கரவாகனங்களையும் P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். P-3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் தேவராஜ், வ/21, த/பெ.பார்த்திபன், எண்.11, அன்னை சத்யா நகர் 1வது தெரு, வியாசர்பாடி, சென்னைஎன்பதும், தப்பிச் சென்ற நபர் அவரது கூட்டாளி விஸ்வா (எ) ஸ்கேல் என்பதும், இருவரும் சேர்ந்து இருசக்கரவாகனத்தை திருடிக் கொண்டு வரும் வழியில் காவலர்களைகண்டு தப்ப முயன்றபோது ஒருவர் பிடிபட்டதும்தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தப்பிச்சென்ற விஸ்வா (எ) ஸ்கேல், த/பெ.துரைசாமி, எண்.11,அப்பு தெரு, சுந்தரம் மெயின் ரோடு, வியாசர்பாடி, சென்னை என்பவரை 16.7.2021 அன்று கைது செய்தனர். காவல் குழுவினர் இருவரையும் விசாரணை செய்ததில், இருவரும் சேர்ந்து வியாசர்பாடி, செம்பியம் ஆகியபகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதுதெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளிகளிடமிருந்துவிலையுயர்ந்த 3 இருசக்கர வாகனங்கள் உட்பட 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் குற்றவாளி தேவராஜ் மீது P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஏற்கனவே 2 செல்போன்பறிப்பு வழக்குகள் உள்ளதும், குற்றவாளி விஸ்வா மீது D-1 திருவல்லிக்கேணி, T-9 பட்டாபிராம் மற்றும் N-1 இராயபுரம்காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு மற்றும் வீடுபுகுந்து திருடியது தொடர்பாக வழக்குகள் உள்ளதும்தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் 2 குற்றவாளிகளும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படிசிறையில் அடைக்கப்பட்டனர். இரவு ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டுஇருசக்கர வாகனங்கள் திருடிய 2 குற்றவாளிகளை துரத்திச்சென்று பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த P-3 வியாசர்பாடி காவல் நிலைய தலைமைக் காவலர்சுரேஷ்குமார் தலைமையிலான காவல் குழுவினரைசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (19.07.2021) நேரில்அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 

திருடர்களை விரட்டி பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கினார் ஆணையர்

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள்(Tamilnadu Chief Minister’s Constabulary Medals) அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  ​அதன் …

சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கினார் ஆணையர் Read More

கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை பாயுமென தமிழக காவல்த்துறை தலைவர் எச்சரிக்கை

தமிழக காவல்த்துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு , மதுரை மாநகர் காவல் துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல் துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மதுரை மாநகர காவல் ஆணையாளர், தென்மண்டல காவல் துறை தலைவர் …

கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை பாயுமென தமிழக காவல்த்துறை தலைவர் எச்சரிக்கை Read More

125 வது சிப்பாய் புரட்சி நினைவு தினம்

வேலூரில் 125 ஆவது சிப்பாய் புரட்சி நினைவுதினத்தில் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு அஞ்சலி

125 வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் Read More

காரில் கடத்திச் சென்ற நபரை மீட்ட காவலர்களை ஆணையர் பாராட்டினார்

சென்னை பெருநகர காவல், T-15 SRMC போக்குவரத்துகாவல் நிலைய தலைமைக் காவலர்கள் P.லிங்ககுமார்(த.கா.35800) மற்றும் M.பேச்சிமுத்து (த.கா.26828) ஆகியோர் கடந்த 06.07.2021 அன்று இரவு சுமார் 9.15மணியளவில் போரூர் செட்டியார் அகரம் சிக்னலில்போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிக்னலில் நின்று கொண்டிருந்த  TN 12 AF 1983பதிவு எண் கொண்ட Swift Tour காரிலிருந்த ஒருவர்,போலீசாரை கண்டதும் காப்பற்றுங்கள் என கூறிகத்தியுள்ளார். சுதாரித்துக்கொண்ட போக்குவரத்துதலைமைக்காவலர்கள் லிங்க குமார், பேச்சி முத்து ஆகியஇருவரும் மேற்படி காரை வழிமறித்து மடக்கி பிடித்துவிசாரணை செய்தனர். விசாரணையில் ரியாஷ் அலி, வ/39, த/பெ.சையதுஇப்ராஹிம், எண்.4, ஐசக் நகர், பட்டூர், மாங்காடுஎன்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மாங்காடு, பரணிபுத்தூர் மேம்பாலம் அருகே  சென்று கொண்டிருந்தபோது, மேற்படி காரில் வந்த 3 நபர்கள், ரியாஷ் அலியைகாரில் வலுக்காட்டாயமாக ஏற்றி கடத்தி வந்ததுதெரியவந்தது. அதன் பேரில் ரியாஷ் அலியை போலீசார்பத்திரமாக கடத்தல்காரர்களிடமிருந்து மீட்டனர். கடத்தல்சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்து  T-15  SRMC  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். T-15 SRMCகாவல் நிலைய போலீசார் கடத்தல் சம்பவம் நடைபெற்றஇடம் T-14 மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குற்றவாளிகள் மூவரையும் T-14 மாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.   T-14 மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில்பிடிப்பட்ட நபர்கள் 1.ராஜா, வ/31, த/பெ.கோபால், எண்.106, சின்னாண்டிபட்டி கிராமம், காளையாபட்டி அஞ்சல், கரூர்மாவட்டம் 2.சுரேஷ், வ/38, த/பெ.தேவராஜ், எண்.25, நாகாத்தம்மன் தெரு,எம்.ஜி.ஆர் நகர், சென்னை கார்ஓட்டுநர் 3.சரவணன், வ/42, த/பெ.மாரிமுத்து, எண்.8, வள்ளுவர் தெரு, வீரராகவபுரம், மேல்பாக்கம், சென்னைஎன்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கத்தி, 1 இரும்புராடு, 3 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல்செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கடத்தப்பட்ட ரியாஷ் அலி,தனது நண்பரான தர்மராஜா என்பவரிடமிருந்து கடன்வாங்கிய ரூ.30,000/-ஐ திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜா  தனதுநண்பர்களான ராஜா, சுரேஷ், சரவணன் ஆகியோர்உதவியுடன் ரியாஷ் அலியை கடத்தி கடன் தொகையைதிரும்ப கேட்டு மிரட்டியுள்ளது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்அடைக்கப்பட்டனர். தலைமறைவாகியுள்ள தர்மராஜாவைதனிப்படை போலீசார்  தீவிரமாக தேடிவருகின்றனர்.      பணியில் விழிப்புடன் செயல்பட்டு காரில் கடத்திசெல்லப்பட்ட நபரை மீட்டு                   …

காரில் கடத்திச் சென்ற நபரை மீட்ட காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

குற்றவாளியை மடக்கிப்பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

T16 நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர்எஸ்.ஹரிகிருஷ்ணன் (த.கா.26191) மற்றும் ஊர்க்காவல் படைகாவலர் கே.அஸ்வின்குமார் (HG 5037) ஆகியோர் 03.7.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார்03..00 மணியளவில் (04.7.2021) நசரத்பேட்டை சிக்னல் அருகில்சந்தேகத்திற்கிடமாக 2 பல்சர் இருசக்கர வாகனங்களில் சென்ற 3 நபர்களை நிறுத்தியபோது, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றனர். உடனே, காவலர்கள் இருவரும், பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்தமற்றொரு நபரை மடக்கிப்பிடித்து, அவர் இடுப்பில் மறைத்துவைத்திருந்த ஸ்குரூ டிரைவர் மற்றும் கட்டிங் பிளேயரைஎடுத்தபோது, அந்த நபர் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு, காவலர்களை தள்ளிவிட்டு தப்ப முயன்றார். அப்போது அவ்வழியேமற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த T-16 நசரத்பேட்டைகாவல் நிலைய காவலர் வி.எம்.ஏகாம்பரம் (கா.51419) என்பவரும்காவலர்களுடன் சேர்ந்து தப்ப முயன்ற நபரை மடக்கிப்பிடித்துவிசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் விஜய்,வ/24, த/பெ.லோகநாதன், ரெட்டிதோப்பு, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் என்பதும், விஜய்தப்பிச் சென்ற அவரது 2 நண்பர்களுடன் ஒரே பல்சர் இருசக்கரவாகனத்தில் சென்னைக்கு வந்ததும், நள்ளிரவு பூந்தமல்லியில்நோட்டமிட்டு, பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள ஒருவீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மற்றொரு பல்சர் இருசக்கரவாகனத்தை திருடிக் கொண்டு, விஜய் அவரது இருசக்கரவாகனத்திலும், நண்பர்கள் இருவரம் திருடிய இருசக்கரவாகனத்திலும் சொந்த ஊருக்கு செல்லும் வழியில்நசரத்பேட்டையில் விஜய் பிடிபட்டதும் தெரியவந்தது. உடனே, தலைமைக் காவலர் ஹரிகிருஷ்ணன், இரவு ரோந்துபணியிலிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.கோவிந்தராஜன்அவர்களுக்கு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு 2 நபர்கள்செல்வதாக தகவல் கொடுத்ததின்பேரில், காவல் ஆய்வாளர்திரு.கோவிந்தராஜன், தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றுகண்காணித்தபோது, 2 நபர்கள் மாம்பாக்கம், Saint Gobainநிறுவனம் அருகில் திருடிச் சென்ற பல்சர் இருசக்கர வாகனத்தைபோட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், மற்றொரு பல்சர் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி இருசக்கர வாகனம் பூந்தமல்லி பகுதியில்திருடப்பட்டதால், பிடிபட்ட குற்றவாளி விஜய், பறிமுதல்செய்யப்பட்ட 2 பல்சர் இருசக்கர வாகனங்கள், ஸ்குரூ டிரைவர்மற்றும் கட்டிங் பிளேயருடன் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர்.  அதன்பேரில் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்குப்பின்னர் எதிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றஉத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். ​ 2. அமைந்தகரை பகுதியில் வீட்டிலுள்ள சிலிண்டரில் பற்றியதீயை அணைத்து அசம்பாவிதம் நிகழாமல் தடுத்த தலைமைக்காவலர்  ​சென்னை, அமைந்தகரை, எம்.எம்.காலனி, எண்.28 என்ற முகவரியில் வசிக்கும் நாராயணன் என்பவரின் மகள்கடந்த 03.7.2021 அன்று இரவு சுமார் 08.30 மணியளவில், வீட்டின் வெளியே வாசலில் மண்ணெண்ணெய் அடுப்பைபற்ற வைத்தபோது, வீட்டிற்குள் இருந்த கேஸ் சிலிண்டரில்வாயு கசிந்து இருந்ததால், அடுப்பிலிருந்த தீ வீட்டிற்குள்பரவி வீட்டினுள் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரியஆரம்பித்தது. உடனே, நாராயணன் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், K-3 அமைந்தகரை காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்புதலைமைக் காவலர் சரவணன் (த.கா.42734) சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று, வீட்டில் பார்த்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் கேஸ் சிலிண்டரும் தீபிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே தலைமைக் காவலர்சரவணன், ஒரு துணியை தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி, எரிந்து கொண்டிருந்த சிலிண்டர் மீது மூடி சிலிண்டரில்பற்றிய தீயை அணைத்து, சிலிண்டரை வீட்டிற்கு வெளியேகொண்டு வந்து போட்டார். இதனால் பெரும் அசம்பாவிதம்நிகழாமல் தடுக்கப்பட்டது. இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு இருசக்கரவாகனத்தை திருடிச்சென்ற குற்றவாளியை கைது செய்த T-16 நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர்ஹரிகிருஷ்ணன், காவலர் ஏகாம்பரம், ஊர்க்காவல் படைகாவலர் அஸ்வின்குமார் மற்றும் K-3 அமைந்தகரை காவல் நிலைய தலைமைக் காவலர் ஆகியோரை சென்னைபெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால், இ.கா.ப.,  நேரில் அழைத்துபாராட்டி வெகுமதி வழங்கினார்.

குற்றவாளியை மடக்கிப்பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

ரூ 24.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல், ஒருவர் கைது

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, ஏர் அரேபியா விமானம் ஜி9-471மூலம் சார்ஜாவில் இருந்து சென்னை வந்திறங்கிய திருவாவூரை சேர்ந்த கலையரசன் கருணாநிதி, 31, என்பவரை வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர். அவரை சோதனையிட்ட போது, அவரது உடலில் …

ரூ 24.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல், ஒருவர் கைது Read More

சென்னை விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள போதை பவுடர் மற்றும் கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.  தகவல் அடிப்படையில், சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இரு பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றி சோதனை …

சென்னை விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல் Read More