31 லட்சம் மதிப்பிலான தங்கம், சென்னைவிமான நிலையத்தில் பறிமுதல். இருவர் கைது

உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின்அடிப்படையில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஜி9-471 என்றவிமானத்தில் சென்னை வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த அகிலன்(27) என்பவர் தங்கம் கடத்தி வரக்கூடும் என்ற சந்தேகத்தின்பெயரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறைஅதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடைபெற்ற சோதனையில் 715 கிராம் எடையிலானதங்கப் பசை அடங்கிய மூன்று பொட்டலங்கள் அவரது உடலில்மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து சுங்கச் சட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் மதிப்பில்மொத்தம் 633 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரிடம் இருந்து தங்கத்தைப் பெறவிருப்பவரைகண்டறிவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வெளியேஅழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரைத் தேடி வந்த நபரும் பிடிபட்டார். ராமநாதபுரத்தைச்சேர்ந்த முஹம்மது உவைஸ் (23) என்ற அந்த நபர் இந்தகடத்தலில் தமது பங்கையும் ஒப்புக்கொண்டார். இருவரும்கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 31 லட்சம் மதிப்பில் மொத்தம் 633 கிராம்தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 லட்சம் மதிப்பிலான தங்கம், சென்னைவிமான நிலையத்தில் பறிமுதல். இருவர் கைது Read More

கஞ்சா வியாபாரியை கைது செய்த காவலரை ஆணையர் பாராட்டினார்

16 நசரத்பேட்டை காவல் நிலையதலைமைக்காவலர்    T.சீனிவாசன் (த.கா.35312) என்பவர் (1.7.2021) காலை 10.15 மணியளவில்  நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டபாப்பான் சத்திரம், பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை, சிவன்கோயில் அருகே ரோந்து சென்று கொண்டிருந்த போது, அங்குஇருசக்கர வாகனத்துடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்த போதுஅவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனை செய்த போது, கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில்இருவரையும் கைது செய்து  T-16 நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.​T-16 நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்டநபர்கள் 1.தேவேந்திர நாத்கொகோய், , வ/31,  த/பெ.அகன்சந்திரகொகோய், சன்டியா தாலுக்கா, டின்சுகியா மாவட்டம்அஸ்ஸாம் 2.அன்டார்யாமி மஹாலிக், வ/23, த/பெ.பிரபாகர்மஹாலிக், கல்யாண்பூர், பலேஸ்வர், ஓடிசா மாநிலம்  ஆகியஇருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.1,24,320/-, 3 செல்போன்கள்மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மேற்படிஇருவரும்  நசரத்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ளபகுதிகளில் கஞ்சா  விற்பனை செய்தது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டுநீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.  ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு கஞ்சாவிற்பனை செய்த  2 வெளிமாநில குற்றவாளிகளைகைது செய்த T-16 நசரத்பேட்டை காவல்நிலையதலைமைக்காவலர் T.சீனிவாசனை,  சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 02.7.2021 நேரில் அழைத்து பாராட்டிவெகுமதி வழங்கினார். 

கஞ்சா வியாபாரியை கைது செய்த காவலரை ஆணையர் பாராட்டினார் Read More

காவல்துறை தலைமை இயக்குநர் J.K.திரிபாதி, இ.கா.ப பணி ஓய்வு பெறுவதை யொட்டி பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் J.K.திரிபாதி, இ.கா.ப 30.6.2021 பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டு, காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். காவல் துறை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) M.ரவி, …

காவல்துறை தலைமை இயக்குநர் J.K.திரிபாதி, இ.கா.ப பணி ஓய்வு பெறுவதை யொட்டி பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. Read More

திருவல்லிக்கேணி உதவி ஆணையராக பாஸ்கர் பதவி ஏற்பு.

சென்னை மாநகர காவல்துறையின் பத்திரிக்கை தொடர்பு உதவி ஆணையராக பதவி வகித்து வந்த பாஸ்கர், சென்னை திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக மாற்றப்பட்டார். சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்ற பாஸ்கர் சென்னை திருவல்லிக்கேணி உதவி ஆணையராக பதவி ஏற்றுக் கொண்டார்.

திருவல்லிக்கேணி உதவி ஆணையராக பாஸ்கர் பதவி ஏற்பு. Read More

பொதுமக்களிடம் காவலர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள டிஜிபி அறியுறுத்தல்

காவலர்கள் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக காவல்த்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையின் தலைமை பொறுப்பில் பணியாற்றுவது ஓர் அரிய சந்தர்ப்பம். இந்த அரிய வாய்ப்பை எனக்கு தந்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை …

பொதுமக்களிடம் காவலர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள டிஜிபி அறியுறுத்தல் Read More

ரூ.1 கோடி மோசடி புகாரில் நடிகர் சுரேஷ்

ஒரு கோடி ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வீனா. ராமமூர்த்தி. ராமமூர்த்தி, எர்த் மூவர்ஸ் என்ற …

ரூ.1 கோடி மோசடி புகாரில் நடிகர் சுரேஷ் Read More

தமிழ்நாட்டின் காவல்த்துறைத் தலைவராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வணையம் 3 பேர் கொண்ட பட்டியல் அனுப்பிய இருந்தன் அடிப்படையில், புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை …

தமிழ்நாட்டின் காவல்த்துறைத் தலைவராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் Read More

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது 10 பேர் கொண்ட கும்பல்!: தனிப்படை போலீசாரிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன் திடுக் தகவல்.

எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களை குறிவைத்து பல லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றது வடமாநிலத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களில் நூதன முறையில் அரங்கேறிய கொள்ளை …

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது 10 பேர் கொண்ட கும்பல்!: தனிப்படை போலீசாரிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன் திடுக் தகவல். Read More

தங்கம் கடத்தல் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில், எமிரேட்ஸ் விமானம் ஈகே 544 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய, சென்னையை சேர்ந்த முகமது அபுபக்கர் ஜெய்னுலாபிதீன், 62, என்பவர், வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். கேள்விகளுக்கு முன்னுக்கு பின்னாக அவர் பதிலளித்ததை …

தங்கம் கடத்தல் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் Read More

சென்னையில் 60 உதவி போலீஸ் கமிஷ்னர்கள் மாற்றம்

புதிதாக நியமிக்கப்பட்ட உதவி கமிஷனர்கள் பெயர் விவரம், அவர்கள் பதவி ஏற்கும் இடம் விவரம் வருமாறு:- சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர்கள் 1. சுதர்சன்- நீலாங்கரை, 2.பாலமுருகன்-வட பழனி, 3. அமீர் அகமது-பரங்கிமலை, 4. அர்னால்டு ஈஸ்டர்-மீனம்பாக்கம், 5. சீனிவாசன்-தாம்பரம், 6.முருகேசன்-சேலையூர், 7. …

சென்னையில் 60 உதவி போலீஸ் கமிஷ்னர்கள் மாற்றம் Read More