ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்

20.09.2021 அன்று ஒன்றிய அரசை கண்டித்து நடந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க‌. இ.கருனாநிதி..M L A. ம.தி.மு‌க‌ சார்பில் மாவட்ட துனை செயலாளர் குரோம் பேட்டை நாசர்.‌‌மற்றும் காங்கிரஸ்‌‌..விடுதலை சிறுத்தை கட்சி..கம்யூனிஸ்ட்..மனித நேய மக்கள் கட்சி ஆகிய கூட்டணி கட்சி நிர்வாகிகள் …

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம் Read More

நீட் தேர்வுக்கு விலக்களிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார் வன்னிய சங்கத் தலைவர்

இந்த கடிதம்  உங்களுக்கும் வந்துசேரும்  என நம்புகிறேன். நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுகிறேன். மேற்கூறிய பொருள் தொடர்பாக நாங்கள் உங்களுக்கு பின்வரும் கடிதத்தை எழுதுகிறோம். திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2021, தமிழ்நாடு சட்டமன்றம் இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புக்கான  நீட் …

நீட் தேர்வுக்கு விலக்களிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார் வன்னிய சங்கத் தலைவர் Read More

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது

தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்பவிளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும்நோக்கத்திலும், ஒன்றிய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப்பட்டியலில் சேர்த்திட மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்அறிவுரையின்படி கோரப்பட்டது. அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை ஒன்றியஅரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுஅமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து“புதிய கேலோ இந்தியா” திட்டத்தின் கீழான“விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும்உள்ளடக்கி ஊக்குவித்தல்” (Promotion of inclusiveness through Sports) என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினைசேர்த்துள்ளது.  தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றியஅரசால்   அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்குபெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக்கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள்மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பலகூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலைஆகும். தற்போது ஆண்கள், பெண்கள் என்றுஇருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்றுவருகின்றனர். தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும்,கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாதுஇடம் பெற்று வருகிறது. ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்துசிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியவிளையாட்டு ஆணையத்தையும் (Sports Authority of India) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது Read More

சுங்கச்சாவடிகள் குறித்து நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனம் – வேல்முருகன்

தரமான சாலைகள் தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்ததான் வேண்டும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.  வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, கட்டணம் வசூல் காலம் முடிந்த பிறகும் சில தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து சுங்கக் கட்டணங்களை வசூலித்து …

சுங்கச்சாவடிகள் குறித்து நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனம் – வேல்முருகன் Read More

ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் – கமல்ஹாசன்

நிறுவனத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏராளமான தளர்வுகளும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளும் ஃபோர்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன. அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்தாலும் தமிழக …

ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் – கமல்ஹாசன் Read More

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகியதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 16.9.2021 அன்று தலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக,இந்து சமய அறநிலையத் துறை சார்பில்திருச்செந்தூர்– அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில், சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில்நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைதுவக்கி வைத்தார். இறையருள் பெற திருக்கோயில்களுக்குவருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதேஅன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில்754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம்வழங்கப்பட்டு வருகிறது. முந்தையகாலகட்டங்களிலும் திருக்கோயில்கள் மூலம்ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்துவந்துள்ளது. இதனைப் பின்பற்றி கொரோனாபெருந்தொற்று காலத்தில், ஏழை எளிய மக்களின்பசியினை போக்கும் விதமாக திருக்கோயில்கள்சார்பாக 44 இலட்சம் பேருக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம்மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமானமுறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட,இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல்ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்துமுதுநிலை திருக்கோயில்களிலும் பெறப்பட்டுள்ளது.  தற்போது, பழநி – அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், திருவரங்கம் – அருள்மிகுஅரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டுதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு, திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் 4.9.2021 அன்று இந்து சமயஅறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில்திருச்செந்தூர் – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில், சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்றுதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட அன்னதானத்திட்டத்தின் வாயிலாக இம்மூன்று திருக்கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத்திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும்.       இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே. சேகர்பாபு, சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர்முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளிமாவட்ட ஆட்சித் தலைவர்  சு. சிவராசு, இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்  டாக்டர் கே. செந்தில்ராஜ், இ.ஆ.ப., திருவள்ளூர்மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகியதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் Read More

விடியா’ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் கூறுகிறார் இ.பி.எஸ்

“கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம்.  வளர்ச்சிக்கு அறிகுறி அது.  நாம் மக்கள், வன விலங்குகள் அல்ல.  இது நாடு, காடு அல்ல.  காட்டு முறையைக் கையாண்டால் அதற்குப் பெயர் ஜனநாயகமாகாது; பாசிச முறை அது’’ என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் …

விடியா’ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் கூறுகிறார் இ.பி.எஸ் Read More

பொது சொத்துக்களை விற்பது நாட்டின் சுயசார்பை தகர்க்கும் செயலாகும் – இ.கம்யூ.

ஒன்றிய அரசின் அமைச்சரவை பிரதமரின் தலைமையில் கூடி தொலைதொடர்புத்துறையில் நூறு சதவீதம் ‘அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் நிதியமைச்சர் பொதுச் சொத்துக்களை விற்று 6.5 லட்சம் கோடி ரூபாய் பணம் திரட்டுவது என்ற விபரீதத் திட்டத்தை அறிவித்துள்ளார். நாடு விடுதலை …

பொது சொத்துக்களை விற்பது நாட்டின் சுயசார்பை தகர்க்கும் செயலாகும் – இ.கம்யூ. Read More

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் தனித்து போட்டி

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி  மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. புதிய உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் நிற்கும் உங்கள் கரங்களுக்கு வலுச்சேர்க்க …

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் தனித்து போட்டி Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீரமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என …

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை Read More