முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகம்முதன்முறையாக 1967ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்தபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக்காணிக்கை‘ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள்அறிவித்தார்கள். ஆறாவது முறை ஆட்சிக்குவந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, அந்தப்பகுத்தறிவுப் பகலவனின் அறிவுச்சுடரைப் போற்றும்விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றைவிதி எண் 110-ன்கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில்வெளியிடுவது என் வாழ்வில் கிடைத்தற்கரியநல்வாய்ப்பு என்பதை எண்ணி மகிழ்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) ”ஈ.வெ. இராமசாமி என்கிற நான் திராவிடசமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்றசமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ளசமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். இதைச் செய்யஎனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச்செய்ய யாரும்வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டுதொண்டாற்றி வருகிறேன்” என்றுஅறிவித்துக்கொண்டு, 95 வயது வரை மூத்திரச்சட்டியைத் தூக்கிக் கொண்டு இந்த இனத்துக்காக, நாட்டுக்காகப் போராடியவர்தான் தந்தை பெரியார்அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதையேஅடிப்படையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம்தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள் மானமும்அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலகஆசானாக இந்த நாட்டை வலம் வந்தார். அவர் நடத்தியபோராட்டங்கள் யாராலும் ‘காப்பி‘ அடிக்க முடியாதபோராட்டங்கள்; அவர் எழுதிய எழுத்துகள் யாரும்எழுதத் தயங்கும் எழுத்துக்கள்; அவர் பேசியபேச்சுக்கள், யாரும் பேசப் பயப்படும் பேச்சுகள்; தமிழர்நலமெல்லாம் தன்னுடைய நலமாகக் கருதினார்;தமிழர்க்கு எதிரானது எல்லாவற்றையும் தனதுஎதிரியாகக் கொண்டு எதிர்த்திருக்கிறார். அவர் நடந்தநடை, அவர் நடத்திய சுற்றுப்பயணங்கள், அவர்நடத்திய மாநாடுகள், அவர் நடத்தியபோராட்டங்களைச் சொல்லத் தொடங்கினால், இந்தமாமன்றத்தையே பத்து நாட்களுக்கு ஒத்தி வைத்துப்பேச வேண்டும். “மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை; ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்” – இவைஇரண்டும்தான் அவரது அடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகியஇரண்டும்தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன. அந்த இரண்டுக்கும்எவையெல்லாம் தடையாக இருக்குமோ, அவைஅனைத்தையும் கேள்வி கேட்டார்; அறிவியல்பூர்வமாகக்கேள்வி கேட்டார்; தன்னைப் போலவே சிந்திக்கத்தூண்டினார். அவரது சுயமரியாதைச் சிந்தனையால் தமிழினம்சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது; அவர்உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம்சிந்தனைத் தெளிவு பெற்றது. சாதியால் அடக்கிஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி, வேலைவாய்ப்பில்மேன்மையை அடைவதற்கான சமூகநீதிக் கதவைத்திறந்து வைத்தது அவரது கைத்தடியே ஆகும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இன்று இந்தியாமுழுமைக்கும் சமூகநீதிக் கருத்துகள்விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்டஅடித்தளமே காரணம். நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாதஅவரால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்முதல் முதலாகத் திருத்தம் செய்யப்பட்டது.சட்டமன்றத்துக்குள் வர ஆசைப்படாத அவரதுசிந்தனை கொண்ட சட்டங்கள் ஏராளமாக இந்தமாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தனதுசிந்தனையை அடுத்தவர் மூலமாகச் செய்ய வைக்கும்அபூர்வமான ஆற்றல் அவருக்குத்தான் இருந்தது. ‘என் வாழ்வில் வசந்த காலம் என்பது தந்தைபெரியாரோடு நான் இளைஞராக இருந்து வலம் வந்தகாலம்தான்‘ என்று நம்மையெல்லாம் உருவாக்கியபேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். ”பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்” என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) பேரறிஞர் பெருந்தகையும், தலைவர் கலைஞர் அவர்களும் உருவான குருகுலம்பெரியாருடைய குருகுலமாகும். இந்தக் குருகுலத்துப்பயிற்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தைஉருவாக்கி, அரசியல் புரட்சிகரக் கருத்துக்களைத்தமிழ்நாட்டில் விதைத்து, ஆட்சிக்கு வந்து அதேகொள்கையை நிறைவேற்றி வரும் அந்தக் காட்சியை …
தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம்நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More