இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது.

தமிழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவராக தேர்ந்தெடுத்த பிறகு நடந்த முதல் நேர் காணல் கூட்டம் அண்மையில் மும்பை அந்தேரியிலுள்ள தி  கிளப்பில்  நடந்தது . மத்திய அரசு அறிவித்த (Cinematograph Act amendment ) …

இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது. Read More

சிஸ்டம் தவறாக இருக்கிறது; சில நேரங்களில் தன்னம்பிக்கை தளர்கிறது’ – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கடந்த கால ஆட்சியில், தமிழக அரசின் சிஸ்டம் தவறாக உள்ளது. தற்போதிருக்கும் நிதிநிலைமையைப் பார்க்கும் போது எனக்கே சில நேரங்களில் தன்னம்பிக்கை தளர்கிறது என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழகம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் தற்போதைய நிதிநிலைமை உள்ளது. …

சிஸ்டம் தவறாக இருக்கிறது; சில நேரங்களில் தன்னம்பிக்கை தளர்கிறது’ – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் Read More

2020 – 21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது

கொரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் வருமானம் சரியத் தொடங்கி விட்டது. முந்தைய ஆட்சியில் பெறப்பட்ட கடனால் ஏற்பட்ட சிக்கல்களை விளக்கியுள்ளேன்” *வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு. ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை …

2020 – 21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது Read More

கொளத்தூர் தொகுதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் 8.8.2021 அன்று  கொளத்தூர், குருகுலம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட 135 பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி, முதியோர், கைவிடப்பட்டோர், விதவைகள் உதவித் தொகைகளுக்கான ஆணைகள், …

கொளத்தூர் தொகுதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் Read More

நடிகர் சமூகம் சார்பாக பூமிகா அறக்கட்டளை க்கு நன்றி தெரிவித்தார் நடிகர் நாசர்

உலகமே இருளில் தத்தளிக்கின்றது. சோடியம் விளக்கு எல் இ டி விளக்குகளை தேடாமல் சின்னஞ்சிறு தீக்குச்சி உரசல்களுக்காக துழாவி கொண்டிருக்கும் போது அகல் விளக்காய் வந்தது பூமிகா அறக்கட்டளை (poomika trust). வெளிச்சம் எவ்வளவு தூரம் பாய்கிறது என்பதல்ல. வெளிச்சம் தோன்றியது …

நடிகர் சமூகம் சார்பாக பூமிகா அறக்கட்டளை க்கு நன்றி தெரிவித்தார் நடிகர் நாசர் Read More

அதிமுகவின் அவைத் தலைவர் பதவிக்கு நியமனத்தில் இபிஸ் ஓபிஸ் இடையே போட்டி

அதிமுக வின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் இரண்டு தினங்களுக்கு முன்பாக மறைந்துவிட்டார். அதிமுக-வில் நீண்டகாலம் அவைத்தலைவர் பதவியை அலங்கரித்த மதுசூதனனின் மறைவுக்கு பிறகு அந்த இடத்தில் யாரை அமரவைப்பது என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அ.தி.மு.கவில் குறிப்பிட்ட சில அதிகாரங்களை கொண்டுள்ள அவைத்தலைவர் …

அதிமுகவின் அவைத் தலைவர் பதவிக்கு நியமனத்தில் இபிஸ் ஓபிஸ் இடையே போட்டி Read More

இனி பெப்சி தொழிலாளர் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ் திரையுலகம் சுமூகமாகவும்> பொருளாதார இழப்பை தவிர்க்கும் வகையில் இயங்குவதற்க்காக தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதை திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் தலைமையிலான நிர்வாகிகள் ஒப்புகொண்டார்கள். ஆனால் அடுத்த நாளே தயாரிப்பாளர்கள் …

இனி பெப்சி தொழிலாளர் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு Read More

மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் – சரத்குமார்

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு பள்ளிகள்செயல்படாமல், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உட்பட அனைவரும்தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்காலகனவுடன் உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களின்முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், மத்திய அரசு கொரோனா 3 – வது அலை குறித்தமுன்னெச்சரிக்கை இன்றி, மாணவர்களின் பின்புலத்தில் நிலவும்ஏற்றத்தாழ்வு வேறுபாடுகள் பற்றிய கவலையின்றி, செப்டம்பர் 12 – ந்தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பதுமருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மாணவர்களைஅதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.  சமத்துவமற்ற கல்வி, சரிசமமற்ற பாடத்திட்டம், சீரற்ற கல்விகட்டமைப்பு என்றிருக்கும்போது, மாநில பாடத்திட்டங்களில்பயிலும் மாணவர்களுக்கு மத்திய பாடத்திட்டத்தின் கீழ் ஒரேவகையான தேர்வு நடத்தும் இத்தகைய போட்டி நிலை உலகில்எந்த நாடுகளிலும் கிடையாது. பல்வேறு மொழிகள், மரபுகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் கொண்ட பல மாநிலங்களைஒருங்கிணைத்து கூட்டாட்சியாக  இந்திய ஆட்சிநடைபெறுகிறது.  ஆனால், மாநில அதிகாரத்திற்குட்பட்டகல்விதுறையில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முனைவதுமுற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கிடையே நிலவும் சமூக, பொருளாதார வேறுபாடுகளை களையாமல், சமத்துவத்தைஉருவாக்காமல், எளிய மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும்தடுப்பாக நீட் அமைந்துள்ளது.  தேர்வில் அதிக மதிப்பெண் பெற, வசதியுள்ள மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில்லட்சக்கணக்கில் செலவு செய்து பயில்வார்கள். வசதியற்றமாணவர்களுக்கு தனியார் பயிற்சி சாத்தியமற்றது.

மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் – சரத்குமார் Read More

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன்உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்- தமிழ் தேசிய பேரியக்கம்

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்துள்ளபுதிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய புதியமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த 03.08.2021 அன்று உச்ச நீதிமன்றம் அரியான மாநிலஅரசு – எதிர் – இராசுகுமார் என்ற வழக்கில் மிக முக்கியமானதீர்ப்பை வழங்கிருக்கிறது. “அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக்குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட முடியாது. தொடர்புடைய மாநில அரசின் பரிந்துரை ஆளுநரைகட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தது. தண்டனைக் குறைப்புகுறித்து மாநில அமைச்சரவை பரிந்துரை அளிக்கும் போதுஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும்” என்றுஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏமந்த் குப்தா மற்றும்ஏ.எஸ்.கோபண்ணா ஆகியோர் வழங்கிய தீர்ப்பு உறுதிப்படகூறுகிறது. இதற்கு முன்னர் மாருராம் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்றவழக்கில் (1981, 1, SCC, 107) உச்ச நீதிமன்ற அரசமைப்புஆயம் “ஆளுநர் என்பவர் மாநில அரசின் சுருக்கெழுத்துவடிவம். அவர் மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். ஒரு மாநில அரசு தண்டனைக் குறைப்பு ஆணையை ஆளுநரின்ஒப்புதல் இல்லாமல் கூட நேரடியாக அறிவித்துவிடலாம்ஆயினும் பணி விதிகள் மற்றும் அரசமைப்புச் சட்ட இங்கிதம்காரணமாக அமைச்சரவையின் முடிவு ஆளுநரின் வழியாகசெயலுக்கு வரவேண்டிருக்கிறது” என்று அரசமைப்பு ஆயம்கூறியிருப்பதை தங்களது முடிவுக்கு அடிப்படையாகநீதிபதிகள் ஏமந்த் குப்தாவும், ஏ.எஸ். கோபண்ணதாவும்மேற்கோள் காட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசு – எதிர் – சிறிகரன் என்றமுருகன் எனும் ஏழு தமிழர் வழக்கில் (2016, 7, SCC, 1) உச்சநீதிமன்றம் இதே போன்று கூறியிருப்பதையும் மேற்கோள்காட்டிய நீதிபதிகள் ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குகட்டுப்பட்டு முன் விடுதலை வழங்குவது அவரது நீங்கா கடமைஎனத் தெளிவுப்படுத்துகிறார்கள். இந்த புதிய சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன்உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்துபுதிய பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாருராம் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்விடுதலை மற்றும் மன்னிப்பு வழங்கும் செயலில் உறுப்பு 72ன்படியான குடியரசுத் தலைவரின் அதிகாரமும் உறுப்பு 161ன்படியான ஆளுநரின் அதிகாரமும் ஒத்தவலு உள்ளவை, ஒரேநேரத்தில் செயல்பட கூடியவை என்று தெளிவுபடகூறியிருக்கின்றன. எனவே இச்சிக்கல் குறித்து தமிழ்நாடு அரசு குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதை ஒரு தடையாககருதாமல் புதிய பரிந்துரையை உருவாக்கி அதனைஆளுநருக்கு அனுப்பலாம். எந்த சட்டைத் தடையும் இல்லை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகஅமைச்சரவையை கூட்டி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழுதமிழர்களை விடுதலை செய்வதற்கு உரிய பரிந்துரையைஆளுநருக்கு உடனடியாக அனுப்பி ஏழு தமிழர் விடுதலைக்குவலுவாக முயலவேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம்சார்பில் கேட்டுகொள்கிறேன். 

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன்உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்- தமிழ் தேசிய பேரியக்கம் Read More

உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின்படி 7தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன்

கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி  ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதாவது,அரசமைப்புச் சட்ட உறுப்பு 161கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது.  ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு …

உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின்படி 7தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன் Read More