காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்- கமலஹாசன்

பெருந்தனக்காரர்களும், ஜமீன்தார்களும் பிரிட்டிஷாருக்கு ஆலோசனை சொல்ல உருவாக்கப்பட்ட கவுரவ அமைப்பே ‘சட்ட மேலவை’யின் மூலவடிவம். விடுதலைக்குப் பின் ஜனநாயகம் மலர்ந்து மக்கள் பிரதிநிதிகளின் சட்டமன்றம் உருவான பிறகு இந்த அவையின் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. இன்று இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே …

காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்- கமலஹாசன் Read More

கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்

சென்னை குரோம்பேட்டை 23வது வட்ட திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 3ஆம் ஆண்டு நனைவு நாளில் கலைஞர் அவர்களின் திரு உருவ படத்திற்க்கு மலர் மாலை அனிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது. அஞ்சலி செலுத்த வந்திருந்த  கழக தோழர்களுக்கும் பொது …

கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் Read More

கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது – வேல்முருகன்

காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. பொதுத்துறையில் இயங்கி வரும் நான்கு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக பொதுக்காப்பீட்டு வர்த்தகம்  திருத்தச் சட்ட முன்முடிவை எதிர்க்கட்சிகளின் …

கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது – வேல்முருகன் Read More

அதிமுக கழக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்

மதுசூதனன் மறைவையொட்டி வரும் 7ஆம் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு  என  அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது

அதிமுக கழக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் Read More

படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம்

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. …

படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம் Read More

14 ஆண்டுகள் சிறை தண்டணையை முடித்தவர்களை மாநில அரசு விடுதலை செய்யலாம்

அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த கைதிகளை ஆளுநரின் ஒப்புதலின்றி மாநிலங்களே விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த வேண்டும்!* என தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை …

14 ஆண்டுகள் சிறை தண்டணையை முடித்தவர்களை மாநில அரசு விடுதலை செய்யலாம் Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் “எண்ணம் போல் வாழ்க்கை” பாடலின் பதாகை வெளியீடு

எண்ணம் போல் வாழ்க்கை” தனிப் பாடலுக்கான லோகோ மற்றும் போஸ்டரை நடிகர் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ‘வேம்புலி’ ஜான் கொக்கன் வெளியிட நடிகர் ரியோ ராஜ் பெற்றுக்கொண்டார்.  20க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திரங்கள் பாடிய தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் “எண்ணம் …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் “எண்ணம் போல் வாழ்க்கை” பாடலின் பதாகை வெளியீடு Read More

விடியல் தருவதாககூறி ஆட்சிக்கு வந்த திமுக, இளைஞர்களை இருட்டில் தள்ளுகிறதென சிவி சண்முகம் குற்றம் சாட்டினார்

கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியின் இன்றைய உலகம் கணினியில் தொடங்கி கைப்பேசி வடிவில் மனிதனின் உள்ளங் கைக்குள் சுருங்கிவிட்டது. ​நாட்டில் உள்ள மாணவச் செல்வங்கள், இளைய சமுதாயத்தினர் தங்களது படிப்பு,  அறிவு மற்றும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு இந்த விஞ்ஞானப் …

விடியல் தருவதாககூறி ஆட்சிக்கு வந்த திமுக, இளைஞர்களை இருட்டில் தள்ளுகிறதென சிவி சண்முகம் குற்றம் சாட்டினார் Read More

மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக ஆகஸ்ட் 10ல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்!*

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்  மின்சார சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முயலும் ஒன்றிய பாஜக அரசின் ஒருதலைப் பட்சமான  அறிவிப்புக்கு  எதிராக,  நாடு …

மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக ஆகஸ்ட் 10ல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்!* Read More

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும்முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா – கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில்வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர்அவர்களின் திருவுருவப் படத்திறப்பு விழா – ஆகிய விழாக்களுக்குத் தலைமை விருந்தினராக வருகைபுரிந்து விழாப் பேருரை ஆற்றவிருக்கின்றமாண்புமிகு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத்கோவிந்த் அவர்களே! விழாவுக்குத் தலைமை வகித்து தலைமையுரைஆற்றவிருக்கக்கூடிய மாண்புமிகு தமிழ்நாடுஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களே!சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதியரசர்மாண்புமிகு திரு. சஞ்சிப் பானர்ஜி அவர்களே! தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்றுஉரையாற்றிய மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு அவர்களே! மாண்புமிகு அவைமுன்னவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர்பெருமக்களே!  நன்றியுரை ஆற்றவிருக்கின்றமாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்  திரு. கு. பிச்சாண்டி அவர்களே! தலைமைச்செயலாளர் அவர்களே! மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்றஉறுப்பினர்களே! சிறப்பு அழைப்பாளர்களே, பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்களே, முக்கியப் பிரமுகர்களே, சட்டமன்றப் பேரவைச்செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களே, அரசு ஊழியர்களே, பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் எனதுநெஞ்சார்ந்த வணக்கத்தை முதலில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். வரலாற்றில் பொன்னெழுத்துக்களால்பொறிக்கத்தக்க நாளாக இந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் இனி வரும் காலங்களில் சிறப்புப்பெறவிருக்கிறது என்பதை நான் பெருமிதத்துடன்குறிப்பிட விரும்புகிறேன்.  தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல – இந்தியவரலாற்றிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புனிதஜார்ஜ் கோட்டைக்கு நம்முடைய குடியரசுத்தலைவர் அவர்கள் இன்றைக்கு வருகைபுரிந்திருக்கிறார்கள். நம்முடைய குடியரசுத் தலைவர் அவர்களைப்பொறுத்தவரையில், பட்டியலின மற்றும்பழங்குடியின மக்களின் நலனை முன்னிறுத்தி, வாதாடுவதில், போராடுவதில் தன்னைஅர்ப்பணித்துக் கொண்டவர்; இந்திய ஆட்சிப் பணிகிடைத்தும், அதனை ஏற்காமல், வழக்கறிஞராகப்பணியாற்றியவர். சமூகநீதியைத் தனது வாழ்வின்இலக்காகக் கொண்டவர். இத்தனைப்பெருமைகளுக்குரிய அவர், இன்றைக்கு நம்முடையதமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகை தந்திருப்பது, நாமெல்லாம் பெருமைப்படத்தக்க ஒன்றாகும். பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டஇந்தச் சட்டமன்றம், கடந்த ஒரு நூற்றாண்டில் பலபுதுமையான சட்டங்களை, முன்னோடித்திட்டங்களை உருவாக்கி, சமதர்ம சமூகத்தைப்படைத்திட வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. 1919-ஆம் ஆண்டில் ‘மாண்டேகு – செம்ஸ்போர்டு’ சீர்திருத்தங்களின் அடிப்படையில்இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தின்மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்அந்நாளைய மாகாண சட்டமன்றங்களில்முதன்முதலில் இடம்பெறத் தொடங்கினர். அச்சட்டமே பின்னர் மாகாணங்களில்தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் உருவாவதற்குவழிகோலியது.  அந்தச் சட்டத்தின்படி, சென்னைமாகாண சட்டமன்றத்துக்கு 1920-ஆம் ஆண்டுமுதன்முதலாகத் தேர்தல் நடந்தது. அந்தத்தேர்தலில் திராவிட இயக்கத்தின் தலைமகனானநீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில்அமர்ந்தது. 1921-ஆம் ஆண்டு கன்னாட் கோமகன்அவர்களால் முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம்தொடங்கி வைக்கப்பட்டதன் பவளவிழாநிகழ்ச்சியும், அதேபோல 1935-ஆம் ஆண்டு இந்தியஅரசுச் சட்டத்தின் கீழ் முதன்முதலாக 1937-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஏற்படுத்தப்பட்டசென்னை சட்டமன்றப் பேரவையின் வைரவிழாநிகழ்ச்சியும், 1997-ஆம் ஆண்டு அப்போதையமுதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர்கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடுஅரசால் சிறப்புடன் கொண்டாடப்பட்டதை, நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற இந்தவேளையில் நான் நினைவுகூர விரும்புகிறேன். அதே வேளையில், இந்தப் பெருமைமிகுசட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த ஒரு சில சட்டங்களை எடுத்துச்சொல்லவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயேமகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தைமுதன்முதலாக நிறைவேற்றிய பெருமை சென்னைமாகாணச் சட்டமன்றத்திற்கு உண்டு.  அதோடு, தேவதாசி ஒழிப்புச் சட்டம், மகளிருக்குஉள்ளாட்சிப் பதவிகளில் உரிய இடஒதுக்கீடு, பெண் குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டம்என மகளிர் நலன் காப்பதில் நாட்டிற்கேமுன்னோடித் திட்டங்களை உருவாக்கித் தந்தபெருமை கொண்டது. அதுமட்டுமல்ல –​பேரறிஞர் அண்ணாஅவர்கள் சென்னை மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததனித் தீர்மானம் நிறைவேற்றியது; சுயமரியாதைமற்றும் சீர்திருத்த திருமணத்தைச்செல்லுபடியாக்கிடச் சட்டம் வகுத்தது; நிலச்சீர்திருத்தச் சட்டம் உருவாக்கியது; மே தினத்தைஅரசு விடுமுறை ஆக்கிட வழிவகுத்தது; மாநிலசுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றியது;பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கிடசட்டம் கண்டது; டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அமைத்திட சட்டம்நிறைவேற்றியது; தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நிறைவேற்றியது . என பார் போற்றும் பல்வேறு சட்டங்களை, தீர்மானங்களை நிறைவேற்றிய பெருமை இந்தச்சட்டமன்றத்திற்கு உண்டு.  சீர்மிகு இந்தச்சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் இன்றைக்குநாமெல்லாம் பங்கேற்றுள்ளோம் என்பதே நாம்எண்ணிப் பெருமிதம் கொள்ள வேண்டியஒன்றாகும்.  தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைநிலைநாட்டப்பட்ட மாபெரும் வளாகம் இது.  அரசுமுத்திரையில் “வாய்மையே வெல்லும்’’ எனத்தமிழ்மொழி அரியணையில் அமர்ந்துஅலங்கரிப்பதையும் கண்டு மகிழ்கிறோம் நாம். மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், ஏழைஎளியவர் என விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கஇந்தச் சட்டமன்றம் தொடர்ந்து செயலாற்றிவருகின்றது. நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்தச்சட்டமன்றத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாகதனது ஜனநாயகக் கடமையை செம்மையாகநிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைநினைவுகூர்ந்து, அவரது திருவுருவப் படத்தைத்திறந்து வைத்திருப்பது அனைத்திற்கும்முத்தாய்ப்பானதாகும்.   1957-ஆம் ஆண்டு இந்த மன்றத்திற்குமுதன்முதலாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தனது கன்னிப்பேச்சில் நங்கவரம் உழவர்கள்பிரச்சினை குறித்துப் பேசி, அனைவரதுகவனத்தையும் ஈர்த்து முத்திரை பதித்தவர் கலைஞர்அவர்கள். முதலமைச்சராக, எதிர்க்கட்சித்தலைவராக, அமைச்சராக, உறுப்பினராகப்பல்வேறு பொறுப்புகளில் மக்கள் பணியாற்றி, பலரது பாராட்டுகளையும், அன்பையும் பெற்றவர்முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். சமூகநீதிக்கு அடித்தளம் அமைத்த மண்டல்ஆணைய அறிக்கையைச் செயல்படுத்த தீர்மானம்,தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையைநிலைநாட்ட காவிரி நடுவர் மன்றத்தை அமைக்கக்கோரும் தீர்மானம், தந்தை பெரியாரின் நெஞ்சில்தைத்த முள்ளை நீக்கிட, அனைத்துச் சாதியினரும்அர்ச்சகராகலாம் என்ற சட்டம், மாணவர்கள்உயர்கல்வி பெறுவதில் இருந்த இடர்களை நீக்கநுழைவுத் தேர்வை ஒழிக்கும் சட்டம் போன்றபல்வேறு புரட்சிகர – சீர்திருத்தத்தீர்மானங்களையும், சட்டங்களையும் இயற்றி, தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தலைவர்கலைஞர் அவர்களை, அவரது 50 ஆண்டுகாலசட்டமன்றப் பணிகளைப் பாராட்டி நடைபெற்றபொன்விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றியபொதுவுடைமைப் போராளியும், முன்னாள்மக்களவைத் தலைவருமான திரு. சோம்நாத்சாட்டர்ஜி அவர்கள்,  “கொள்கைகளுக்காகவும், இலட்சியங்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதற்குத் தீங்கு வரும்போது எந்தத்தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தவர்கலைஞர்” – என்று பாராட்டிப் பேசியதை நினைத்துப்பார்க்கும்போது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்இந்தியத் துணைக் கண்டத்தில் எத்தகையதொருமாபெரும் தலைவராக விளங்கினார் என்பதுதெள்ளத் தெளிவாக விளங்கும்.    ‘உடன்பிறப்பே! உன் இயல்பு என்மீது அன்பைப்பொழிவது! என் இயல்பு உன் அன்புக்குக் கட்டுப்படுவது!நம் இயல்பு கழகத்தைக் கட்டிக் காப்பது!’ – என்று தனது காந்தக் குரலால் தமிழ்நாட்டுமக்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவரது திருவுருவப் படத்தைப் பார்க்கும்போது – சர் பிட்டி தியாகராயர் – டி.எம். நாயர் – டாக்டர்நடேசனார் தொடங்கி இனமானப் பேராசிரியர்வரையிலான பல மாபெரும் தலைவர்களின்முகங்களை நான் காண்கிறேன். முன்னாள் முதலமைச்சரான அவரது திருவுருவப்படத்தைப் பார்க்கும்போது, இன்றும் நம் முன்னால்இருந்து வழிநடத்தும் ஒரு முதலமைச்சராகஅவரைக் காண்கிறேன்.   இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத்தலைவர் அவர்கள்,  தமிழன்னையின்தலைமகனான கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன் – கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன். I take this opportunity to thank our Honourable President for gracing …

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும்முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை Read More