பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கில் டிசம்பர் 20 க்குள் தீர்ப்பு வழங்க ஆணை

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி’க்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை …

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கில் டிசம்பர் 20 க்குள் தீர்ப்பு வழங்க ஆணை Read More

தமிழன்னைக்காக தமிழால் நிகழ்த்தியகின்னஸ் சாதனை

ஆகஸ்ட் 1 – உலகிலுள்ள 800 நடனக் கலைஞர்கள் இணைந்து இணையதளத்தின் மூலம் தமிழன்னைக்கு தமிழால் நிகழ்த்திய கின்னஸ் சாதனை நேற்று நடைபெற்றது.  இந்திய நேரப்படி சரியாக 6.30 மாலை கலைமாமணி மதுரை இரா முரளிதரன் அவர்களின் இயக்கத்தில் அவரால் இயற்றப்பட்ட …

தமிழன்னைக்காக தமிழால் நிகழ்த்தியகின்னஸ் சாதனை Read More

விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடுஅரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலைஅறிக்கைகளை சட்டமன்றப் பேரவையில் தாக்கல்செய்ய உள்ளது.  தமிழ்நாடு அரசு வரலாற்றில்முதன்முறையாக வழக்கமான நிதிநிலைஅறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள்நலத் துறை சார்பாக தனியே ஒரு நிதி நிலைஅறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைநிதிநிலை அறிக்கையினை விவசாயிகள், விவசாயநிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள்ஆகியோரை கலந்தாலோசித்து விவசாயம்செழிக்கவும் விவசாயிகள் அவர்களதுஉழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும்வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கிதயாரிக்க வேண்டுமென்று மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர்பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும்அறிவுறுத்தினார்.  ​மேலும், பொது நிதிநிலை அறிக்கையினைபொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புபிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புபிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மீனவர்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரைகலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப்பட்டகருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுதமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதியமறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்துதரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்தநிதிநிலை அறிக்கையினை தயாரிக்க மாண்புமிகுஅமைச்சர் பெருமக்களையும் அரசு உயர்அலுவலர்களையும் மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் அறிவுறுத்தினார்.

விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் Read More

சங்கம் வளர்த்த மதுரையில் “கலைஞர் நூலகம்” அமைவது அ.தி.மு.க.விற்குகசக்கிறது – எ.வ.வேலு

முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற தி.மு.க. அரசு நினைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம்” என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. பழனிசாமியும் அறிக்கை என்ற …

சங்கம் வளர்த்த மதுரையில் “கலைஞர் நூலகம்” அமைவது அ.தி.மு.க.விற்குகசக்கிறது – எ.வ.வேலு Read More

பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – கமல் ஹாசன்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி ‘அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பினர்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலையளிக்கும் விதமாக உள்ளன. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் பணியாளர்களின் குரலுக்குத் தமிழக அரசு …

பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – கமல் ஹாசன் Read More

குடிசைகளை இழந்தவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றோரமாக 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜூலை 29 அன்று,  காவல்துறை உதவியுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருபகுதி …

குடிசைகளை இழந்தவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது Read More

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,67,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரத்தில் …

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா Read More

கொரோனா பரவல் காரணமாக வடபழநி கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை

வடபழநி ஆண்டவர் கோவிலில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக, ஆடி கிருத்திகை விழாவான நாளை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சூரனை அழித்து, தேவர்களைக் காத்த; ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாக, கிருத்திகை விரத நாள் …

கொரோனா பரவல் காரணமாக வடபழநி கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை Read More

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

2012ஆம் ஆண்டு முதல்  2021ஆம் ஆண்டுபிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும்செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள் ‘தி இந்து’ நாளிதழின்ஆசிரியர் மீது 4 வழக்குகளும், ‘டைம்ஸ் ஆஃப்இந்தியா’ நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், ‘எக்கனாமிக்ஸ் டைம்ஸ்’  நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும், ‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ‘ஆனந்த விகடன்’ வார இதழின்ஆசிரியர்  மீது 9 வழக்குகளும், ‘ஜுனியர் விகடன்’ இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும்,  ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், ‘முரசொலி’ நாளிதழின் ஆசிரியர்மீது 17 வழக்குகளும், ‘தினகரன்’ நாளிதழின்ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன, மேலும், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘நியூஸ் 7’ தொலைக்காட்சி, ‘சத்யம்’தொலைக்காட்சி, ‘கேப்டன்’ தொலைக்காட்சி, ‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, ‘டைம்ஸ் நவ்’தொலைக்காட்சி மற்றும் ‘கலைஞர்’ தொலைக்காட்சிஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல்அறிக்கையில் “பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும்நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள்அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்று வாக்குறுதிஅளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியைநிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீதுபோடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா-2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

அனைவருக்கும் வணக்கம்.  நாட்டுப் பற்றும் உணர்ச்சியும் கலந்த இந்த வரலாற்று நினைவு நாளில் கலந்து கொண்டிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  இராணுவத்தில் பணியாற்றுவது என்பதை பணியாற்றுவது என்று சொல்ல முடியாது.  மக்களைக் காப்பதும் …

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா-2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை Read More