கர்நாடக மேகதாது அணைக்கட்டு தொடபாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்று தீர்மானம் நிறைவேற்றம்
கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையைக்கட்ட உத்தேசித்துள்ள நிலையில், காவிரி நதிநீரில்தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும்,காவிரி நதிநீரைக் கொண்டு விவசாயம் செய்துவரும் தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின்நலனைப் பேணிக்காக்கவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக்கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்துமுடிவெடுப்பதற்கு ஏதுவாக, இன்று (12–7–2021) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்துச்சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன்கலந்துகொண்டார். அனைத்துச் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் …
கர்நாடக மேகதாது அணைக்கட்டு தொடபாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்று தீர்மானம் நிறைவேற்றம் Read More