ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான இத்துறையின்தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்அவர்கள் இன்று (8.7.2021) தலைமைச் செயலகத்தில்ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பல்வேறு அரசுத்துறைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களைக் கண்டறிந்து, விரைந்து நிரப்பிட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான Post Matric மற்றும் Pre Matric கல்வி உதவித்தொகை, உயர்கல்விசிறப்பு உதவித்தொகை, முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை ஆகிய கல்விஉதவித்தொகைத் திட்டங்களை எவ்விதத் தொய்வுமின்றி உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், வெளிநாடுகளில் சென்று முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கானகல்வி உதவித்தொகைத் திட்டத்தினைச் சீரமைத்திடஉரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ளபயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கிட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினர்துணைத் திட்டங்களின்கீழ்ச் செயல்படுத்தப்படும்திட்டங்களின் பயன் உரிய பயனாளிகளைச்சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டும் என்றும்மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உரிய முறையில் அமல்படுத்ப்ப. டுவதைக் கண்காணிக்க வேண்டும்எனவும், இச்சட்டத்தின் கீழ் தொடரப்படும்வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் வலியுறுத்தினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் செயல்படுத்தப்பட்டு வரும. அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் ஆய்வுசெய்ததோடு, கூடுதலாக வசதிகள் தேவைப்படும்குடியிருப்புகளைக் கண்டறிந்துஅக்குடியிருப்புகளுக்கு அனைத்து அடிப்படைஉட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கிடவேண்டும்என்றும் கேட்டுக் கொண்டார். ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமிநிலங்கள், ஆதிதிராவிடர் அல்லாத பிறஇனத்தவர்களிடம் இருப்பதைக் கண்டறிந்து, அவற்றை மீட்டு, ஆதிதிராவிடர்களிடமே திரும்பஒப்படைக்கும் பணியை விரைந்து செயல்படுத்துமாறுமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். வறிய நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதாரமுன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம்செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்கள், பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வுசெய்தமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், துரித மின்இணைப்புத் திட்டத்திற்கான வைப்புத் தொகையினைஉயர்த்திட உரிய நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியம், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நலவாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியம், தமிழ்நாடுபழங்குடியினர் ஆன்றோர் மன்றம், மாநிலஆதிதிராவிடர் நலக்குழு ஆகியவற்றின் செயல்பாடுகள்குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகுஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர்முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறைக்கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச்செயலாளர் எஸ். பழனிசாமி, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் எஸ். மதுமதி, இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், இ.ஆ.ப., சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின்கூடுதல் காவல்துறை இயக்குநர் எச்.எம். ஜெயராம், இ.கா.ப., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.வி.சி.ராகுல், இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினமாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளைஉரிய காலத்தில் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் அறிவுரை Read More