அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் என சட்டசபையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களேதடியால் தட்டி தமிழினத்தை எழுப்பிய தந்தைபெரியாரையும், அன்பெனும் உயிராய் ஒருங்கிணைத்தபேரறிஞர் அண்ணா அவர்களையும், தனித்தனி ஊரில்பிறந்தவர்களையும் ‘உடன்பிறப்பு’ என்ற ஒற்றைச்சொல்லால் ஈர்த்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்அவர்களையும் நெஞ்சில் தாங்கி எனது பதிலுரையைத்தொடங்குகிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் கடந்த 21 ஆம் தேதி, இந்த மாபெரும் சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின்நோக்கங்களையும், எண்ணங்களையும் எடுத்துக்காட்டக்கூடிய  நல்லதோர் உரையைஆற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த அரசின்முதலமைச்சர் என்ற முறையிலும், தனிப்பட்டநிலையிலும் எனது மனமார்ந்த நன்றியை நான்தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மாண்புமிகு ஆளுநர் அவர்களது உரை மீதானவிவாதத்தில் உரையாற்றிய அனைவருக்கும் நன்றிதெரிவித்து, எனது உரையைத் தொடங்கும்அதேவேளையில், என்னை இந்த மாமன்றத்திற்குத்தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கக்கூடிய கொளத்தூர்தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், திராவிடமுன்னேற்றக் கழகம் பெற்ற மகத்தான வெற்றிக்குக்காரணமான அனைத்து கழக உடன்பிறப்புகளுக்கும், தோளோடு தோள் நின்று பணியாற்றிய தோழமைக்கட்சியினருக்கும், பெரும் எதிர்பார்ப்புகளுடன்தங்களுக்குச் சேவை செய்வதற்கான பெரும்வாய்ப்பினை எங்கள் மீது நம்பிக்கை வைத்துவழங்கியிருக்கக்கூடிய அருந்தமிழ்நாட்டுமக்களுக்கும், முதற்கண் என்னுடைய நன்றியையும்,வணக்கத்தையும் இந்தத் தருணத்தில்தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர்”என்ற இந்த அரியஆசனத்தைப் பார்க்கும்போதும், அதிலேஅமரும்போதும், என்னுடைய எண்ணங்கள், கடந்தஒரு நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகளையும், முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அந்த வரலாற்றைப்படைத்த தனிப்பெரும் நாயகர்களையும் சுற்றிச்சுழல்கின்றன. அதன் காரணமாக மெய்சிலிர்ப்பும், பிரமிப்பும், வியப்பும், உண்டாகின்றன. குறிப்பாக, திராவிட இயக்கத்தின்முன்னோடியான நீதிக் கட்சி, 1920 ஆம் ஆண்டு முதல்1937 ஆம் ஆண்டுவரை சுமார் 17 ஆண்டுகள்தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. முதன்முதலாக சமூகநீதிக்கான ஆணைகளை வழங்கி, வடமொழிஆதிக்கத்தைத் தகர்த்து, மகளிருக்கானஉரிமைகளை அங்கீகாரம் செய்து, அவர்களுக்குப்பிரதிநிதித்துவம் தந்து, கல்வித் துறையில்சீர்திருத்தங்களைப் புகுத்தி, சமுதாயமாற்றங்களுக்கான விதைகளை விதைத்து, சமூகநீதியை நீர் ஊற்றி வளர்த்த கட்சி. ஆங்கிலேயரின்இரட்டை ஆட்சி முறையில், மிகவும் குறைவான சட்டஅதிகாரங்களை வைத்துக் கொண்டு, தொலைநோக்குத் திட்டங்களையும் அக்காலத்தில்எவரும் சிந்தித்திராத சீர்திருத்தங்களையும்நிறைவேற்றிய கட்சி.  திராவிட இயக்கத்தின் தாய்க்கழகமான நீதிக் கட்சி, சென்னை மாகாணத்தில்ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து 100 ஆண்டுகள்கடந்துவிட்டது.   அன்றைக்கு இருந்த மிகக் குறைவானஅதிகாரங்களைக் கொண்டே வகுப்புவாரிஉரிமையை நிலைநாட்டியது நீதிக் கட்சி; பட்டியலினமக்களது நலனைப் பேணியது நீதிக் கட்சி;திருக்கோயில்களைக் காத்தது நீதிக்கட்சி;அத்தகைய நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்து 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்குவந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.   தியாகராயரும், நடேசனாரும், டி.எம். நாயரும்போட்ட சமூகநீதி – சமத்துவ சமுதாயம் காணும்அடித்தளத்தில் அமைந்துள்ள ஆட்சிதான் இன்றையதி.மு.க. ஆட்சி.  1967 ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பில் முதன்முதலாக திராவிட முன்னேற்றக்கழகம் அமர்ந்தபோது, “நீதிக் கட்சி ஆட்சியின்தொடர்ச்சிதான் இந்த ஆட்சி” என்று பேரறிஞர்அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதேவழியில்,எங்களது ஆட்சியும் நீதிக் கட்சியின் தொடர்ச்சிதான்என்பதைப் பெருமையோடு நான் சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன்.     நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா! பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர்கலைஞர்! முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சிநான்! ஏன், இந்த அரசு!  தமிழினத்தை நம்மால்தான்வாழ வைக்க முடியும் – தமிழினத்தை நம்மால்தான்வளர்ச்சி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடுதி.மு.கழகத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள்தமிழ்நாட்டு மக்கள்! இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாடு எட்டவேண்டிய இலக்கை, எமதுதொலைநோக்குப் பார்வையைத்தான் மாண்புமிகுஆளுநர் அவர்கள் தமது உரையில் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்கள்.   அன்று நீதிக்கட்சியின் முதலாவது (First Prime Minister) பிரதம அமைச்சராக இருந்த கடலூர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் அவர்கள், காங்கிரஸ்கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தபெருந்தலைவர் காமராஜர் அவர்கள், திராவிடமுன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தி, முதலமைச்சராக இருந்தபேரறிஞர் அண்ணா அவர்கள், 5 முறை முதலமைச்சர்பொறுப்பேற்று 19 ஆண்டுகள் ஆட்சி செய்தசாதனைச் செல்வர், நம்முடைய முத்தமிழறிஞர்கலைஞர் அவர்கள்  ஆகியோரையும், முதலமைச்சராகஇருந்த தகுதிமிக்க ஏனைய சான்றோர்களையும், இந்த நேரத்தில் நினைவுகூர்வது என்னுடைய கடமைஆகும். நமது முன்னோர்களை நினைவுகூர்வதுஎன்பது, தமிழர் பண்பாட்டின் தவிர்க்க முடியாதமுக்கியமான கூறு என்பதை மறந்துவிட முடியாது.   கடந்த 2 நாட்களாக இந்த அவையிலே நடந்திருக்கக்கூடிய விவாதத்திலே, திராவிடமுன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசியகாங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதாகட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழகவாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளைச் சார்ந்த 22 மாண்புமிகு உறுப்பினர்கள், ஆளுநர் உரையின் மீது, தங்களுடைய சீரிய கருத்துகளை மையப்படுத்திஇங்கே உரையாற்றி இருக்கிறார்கள். உரையாற்றியஉங்கள் அனைவரது கருத்துகளையும் இந்த அரசுக்குநீங்கள் சொல்லும் ஆரோக்கியமானஆலோசனைகளாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.  ஏனென்றால் நான் பேரறிஞர் அண்ணாவினுடையஅரசியல் வாரிசு. முத்தமிழறிஞர் கலைஞருடையகொள்கை வாரிசு. சட்டமன்ற உறுப்பினர்கள்பேசும்போது முன்வைத்த கோரிக்கைகள் – தொகுதிசார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் சம்பந்தப்பட்டதுறை அமைச்சர்களால் குறித்து வைக்கப்பட்டுள்ளன. துறை அதிகாரிகளோடு கலந்தாலோசித்துநிச்சயமாக, உறுதியாக உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்பதை நான் இந்த நேரத்திலேதெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஐந்து ஆண்டுகால ஆட்சி உரிமை கொண்ட அரசுஇது. இதில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் – கொள்கைகள் – கோரிக்கைகள் ஆகியஅனைத்தையும் ஆளுநர் உரையில் மட்டுமேமுழுமையாகச் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரைஎன்பது, அரசாங்கத்தின் ஓராண்டுக்கான கொள்கைவிளக்கச் சுருக்கம். அதில் அரசாங்கத்தின்ஐந்தாண்டுகளுக்கான நோக்கம், திட்டம், அணுகுமுறை, செயல்பாடுகள் என அனைத்தையும்அடக்கிவிட முடியாது. ஆளுநர் உரை ஒருமுன்னோட்டம்தான். அனைவருக்கும் எளிதில்புரியும்படி சொல்லவேண்டும் என்றால், இது ஒரு“ட்ரெய்லர்”மாதிரி.  “முழு நீளத் திரைப்படத்தைவிரைவில் வெள்ளித்திரையில் காண்க” – என்றுமுன்பெல்லாம் சொல்லப்பட்டு வந்ததைப்போல, இந்தஅரசு வகுத்திருக்கும் பாதை, அதில் மேற்கொள்ளஉள்ள பயணம், பயணத்தில் எதிர்கொள்ளவிருக்கிற இடர்ப்பாடுகள், அந்த இடர்ப்பாடுகளைக்களைந்தெறியும் சூட்சுமங்கள், சவால்கள் – அவற்றைச் சந்திப்பதற்கான சாதுரியங்கள் எனஅனைத்தும் விரைவில் இந்தப் பேரவையிலேவைக்கப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் விரிவாகஇடம்பெறும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ளவிரும்புகிறேன். …

அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் என சட்டசபையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார் Read More

காவல்துறையின் அத்துமீறலை தடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது

காவல்துறையின் அத்துமீறல் தொடர்வதை அரசு உறுதியாக தடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகில் உள்ள பாப்பநாய்க்கன்பட்டி சோதனைச் சாவடியில் காவல்துறை இளம் ஆய்வாளர் …

காவல்துறையின் அத்துமீறலை தடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது Read More

ஒன்றிய அரசு’ என்று அழைப்பது குறித்து மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் விளக்கம்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.  அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்னசொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள்சொல்கிறோம்.  நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது பாரதம் – மாநிலங்களைக்கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்” என்றுதான்உள்ளது.  India, that is Bharat, shall be a Union of States” என்றுதான் இருக்கிறது. அதைத்தான்பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததைநாங்கள் பயன்படுத்தவில்லை.  ‘ஒன்றியம்’ என்பதுதவறான சொல் அல்ல; ‘மாநிலங்கள் ஒன்றுசேர்ந்தது’ என்பதுதான் அதனுடைய பொருள். இன்னும் சிலர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லாததை, எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள்சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு, …

ஒன்றிய அரசு’ என்று அழைப்பது குறித்து மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் விளக்கம் Read More

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம நிறைவேற்றப்படுமென அறிவித்ததிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நிறைவேற்றியுள்ள சட்டமன்ற தீர்மானத்தைப் போன்று தமிழகத்திலும் திமுக அரசு நடப்பு …

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம நிறைவேற்றப்படுமென அறிவித்ததிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு Read More

ஆலயங்களை திறக்க கற்பூரம் ஏற்றி போராட்டம் – இந்து முன்ன்ணி அறிவிப்பு

ஆலயங்கள் திறக்க 25 ம் தேதி வெள்ளிக்கிழமை கோவில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபடும் போராட்டம்  நடைபெறும் என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்  தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் ஆலயங்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை …

ஆலயங்களை திறக்க கற்பூரம் ஏற்றி போராட்டம் – இந்து முன்ன்ணி அறிவிப்பு Read More

ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபடுனெ அறிவித்தார் ஸ்டாலின்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,  மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி அவர்கள், மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை இங்கே வைத்திருக்கிறார்கள். இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், …

ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபடுனெ அறிவித்தார் ஸ்டாலின் Read More

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பில்அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைவழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின்கீழ்  2021-2022 ஆம்  ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2021 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய்ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்.  வட்டாட்சியர்அலுவலகத்தில்  இணைய வழியில் (ஆன்லைன்) பெறப்பட்டவருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள்மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்றுதமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன்இணைக்கப்பட  வேண்டும்.  இதற்கான விண்ணப்பப்படிவம்நேரிலோ  அல்லது தமிழ்  வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.com) இலவசமாகபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாகரூ.3500/-, மருத்துவப்படி ரூ.500/- வழங்கப்படும்.  விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்டாட்சியர்அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர்கள் / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணைஇயக்குநர் / மாவட்டத் தமிழ் வளர்ச்சி  உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக அனுப்பப்பட வேண்டும்.  சென்னைமாவட்டத்திலுள்ளவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சிஇயக்ககம்,  தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8 என்றமுகவரிக்கு நேரடியாக அனுப்பப்பெறலாம். விண்ணப்பங்கள்அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.8.2021.  

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை Read More

தமிழக்த்தில் மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் குறைவாக உள்ளது – இந்திய தேர்தல் ஆணையம்

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 01.01.2021-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு 16.11.2020 முதல் 15.12.2020 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கள விசாரணைக்கு பின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் …

தமிழக்த்தில் மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் குறைவாக உள்ளது – இந்திய தேர்தல் ஆணையம் Read More

பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன் முறையிலிருந்து பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் அரசின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்த அரசாணையை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்துள்ளாா். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி வாரியங்களைச் சோந்த …

பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன் முறையிலிருந்து பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Read More