தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது நிர்வாக பகிர்வு வசதிக்காக மாவட்டங்கள் பல பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் …

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவு Read More

லைகா நிறுவனம் கொரோனா நிதியாக ரூ.கோடி பெப்சிக்கு வழங்கியது

லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India/FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் , லைகா முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார். லைகா இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன், மற்றும் கெளரவ் சச்ரா, …

லைகா நிறுவனம் கொரோனா நிதியாக ரூ.கோடி பெப்சிக்கு வழங்கியது Read More

நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்ற காங்கிரஸ்

ஆளுநர் உரையை தமிழக அரசின் கொள்கை விளக்க உரையாகத் தான்கருத வேண்டும். மூலம்  முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்தலைமையிலான தமிழக அரசு எத்தகைய வளர்ச்சிப் பாதையில்பயணிக்கப் போகிறது என்பதை ஆளுநர்  உரையில் மிகத் தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிதமிழகம் பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழகஆளுநரின் உரையை, வளர்ச்சிக்கான உரை என்ற முறையில் வரவேற்கக்கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கோவிட்தடுப்புப் பணிகள் தொய்வுற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுபெற்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற கட்சித் தலைவராகஇருந்த போதே, திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்ற எல்லாபணிகளையும் விட கோவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரானபணிகளுக்கே முன்னுரிமை வழங்கியதை அனைவரும் அறிவார்கள். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடனே கொரோனா பெருந்தொற்றைஎதிர்கொள்ள வேண்டிய சவால் மிக்க பணியை மிகுந்த துணிவுடன்பல்வேறு உத்திகளைக் கையாண்டு இன்றைக்கு அதைக்கட்டுப்படுத்துவதில் சாதனைகள் புரிந்துள்ளதை எவரும் பாராட்டாமல்இருக்க முடியாது. அதேபோல, தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே இருந்ததயக்கம் நீக்கப்பட்டு, தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழக அரசின் கொரோனா எதிர்ப்புநடவடிக்கைகளில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைவெளிப்படுத்துகிறது. அதேசமயம், தமிழகத்திற்குத் தடுப்பூசிவழங்குவதில் மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறபோக்கையும் காண முடிந்தது. இதையும் எதிர்கொண்டு தடுப்பூசிபோடுகிற எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தமிழகஅரசின் நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியவை. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று பொது நிவாரண நிதிக்கு 335 கோடி ரூபாய் பெற்றதே மிகப்பெரிய சாதனையாகும். இந்தப் பணியில்முதலமைச்சரின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் அளித்த ஒத்துழைப்பே, முதலமைச்சர் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையைவெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்டகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரண தொகையை, இரண்டு தவணைகளாக மொத்தம்  8,393 கோடி ரூபாய் அளவுக்குவழங்கியதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்த தமிழகமுதலமைச்சரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் தமிழகத்தை அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு நோபல்பரிசு பெற்ற எஸ்தர் ட‡ப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட உலக அங்கீகாரம் பெற்றபொருளாதார நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவைஅமைத்துள்ளது மிகச் சரியான நடவடிக்கையாகும். இவர்களதுஆலோசனை தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருக்கும்என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடந்த அ.தி.மு.க. ஆட்சி 5 லட்சம் கோடி ரூபாய் கடன்சுமையை வைத்து விட்டுச் சென்றுள்ளது. இதை எதிர்கொள்ள வேண்டியகடுமையான பணி இன்றைய தமிழக அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில் சமூக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியபொறுப்பும் இருக்கிறது. இதை உரிய முறையில் எதிர்கொண்டு நிதிவருவாயைப் பெருக்கி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிச்சயம்நிறைவேற்றப்படும் என்ற சூழல் இருப்பதை ஆளுநர் அறிக்கைதெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2014 ஆம்ஆண்டு வரை தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்படவில்லை. மத்தியில்பா.ஜ.க. ஆட்சி செய்த 2017 ஆம் ஆண்டுதான் முதன் முதலில்தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. அன்றைய அ.தி.மு.க. ஆட்சியால் அதைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையில் நீட் தேர்வினால்தமிழக மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கிறமாணவர்களின் எதிர்காலம் எத்தகைய பாதிப்பிற்கு உள்ளானது என்பதைஅனைவரும் அறிவார்கள். இத்தகைய பாதிப்புகளை மதிப்பிடவும், அதிலிருந்து தமிழக மாணவர்களைப் பாதுகாக்கவும் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின்பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ​(கே.எஸ். அழகிரி)

நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்ற காங்கிரஸ் Read More

ஆளுநர் உரை விடியளின் வெளிச்சக்கீற்று என்கிறார் முத்தரசன்

பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து ஆளுநர் உரையாற்றியுள்ளார். பத்தாண்டு காலம் சரிந்து வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை மீட்போம் என் முழக்கத்தை அரசின் உறுதியான கொள்கையாக ஆளுநர் அறிவித்துள்ளார். கடுமையாக கடன்சுமையிலும், நிதி நெருக்கடியிலும் தமிழ்நாடு …

ஆளுநர் உரை விடியளின் வெளிச்சக்கீற்று என்கிறார் முத்தரசன் Read More

சிஏஏ விவகாரத்தில் தொடர் ஏமாற்றமே நீடிக்கிறது!* தமிழக ஆளுநர் உரை தொடர்பான எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் அறிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதையடுத்து, 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் …

சிஏஏ விவகாரத்தில் தொடர் ஏமாற்றமே நீடிக்கிறது!* தமிழக ஆளுநர் உரை தொடர்பான எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் அறிக்கை Read More

சர்வைவர்” (Survivor)

தமிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு ஒரு பெரிய எண்டெர்டைன்மெண்ட் இந்த வருஷம் காத்திருக்கு. ஒரு பக்கம் பிக் பாஸ், இன்னொரு பக்கம் மாஸ்டர் செஃப். இதை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி வரப்போகுது “சர்வைவர்”(Survivor). இதுவும் ஒரு சர்வதேச கான்செப்ட்தான். இப்போது ஜீ தமிழ் சேனல் தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக தமிழில் …

சர்வைவர்” (Survivor) Read More

சென்னையில் புதியதாக பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் ஹப் திறப்பு

சென்னை மீனம்பாக்கத்தில் புதிதாக அமைத்துள்ள பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் கொரியர் நிறுவனத்தின் ஹப்பை, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார் . உடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, எஸ்.டீ. கொரியர் நிறுவனத்தின் தலைவர் அன்சாரி, துணை …

சென்னையில் புதியதாக பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் ஹப் திறப்பு Read More

திருநெல்வேலியின் திகட்டாத உண்மைகள்

1790ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியால் உருவாக்கப்பட்டதுதான் திருநெல்வேலி. திரு=மதிப்பு நெல்=உணவு வேலி=பாதுகாப்பு *திருநெல்வேலி* பிரசித்தம் பெற்றது; ஏன் தெரியுமா? 10 சிறப்பம்சங்களை கொண்டது. 1) முதல் ஈரடுக்கு மேம்பாலம் பெற்ற *இந்திய நகரம்* 2) தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிவத்தலம் …

திருநெல்வேலியின் திகட்டாத உண்மைகள் Read More

பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி ஆய்வு

தமிழ்நாடு  குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சேப்பாக்கம் திட்டப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் …

பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி ஆய்வு Read More

100 நபர்களுடன் திரைப்படம் தயாரிக்க அனுமதியளித்த முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்தது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”  கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவது …

100 நபர்களுடன் திரைப்படம் தயாரிக்க அனுமதியளித்த முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்தது Read More