மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைத்திடுக வைகோ கோரிக்கை

தமிழ்நாடு முழுமையும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன், குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றார்கள்.  இசைத் தொழிலை நம்பியே வாழ்கின்றார்கள். கோவில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் மங்கல நிகழ்வுகள், அரசு விழாக்கள் அமைச்சர் …

மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைத்திடுக வைகோ கோரிக்கை Read More

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதி – அரசுக்கு அறிவுறுத்தும் மூத்த பத்திரிக்கையாளர் டி. ஜெ. நவநீதன்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு  செய்தி துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்களின் கவனத்திற்கு: கொரோனாவைரஸ் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரைப்பட தொழில், …

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதி – அரசுக்கு அறிவுறுத்தும் மூத்த பத்திரிக்கையாளர் டி. ஜெ. நவநீதன் Read More

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் – கமல்ஹாசன்

பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைப் …

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் Read More

கொரோனாவுக்கு மற்றுமொரு நடிகர் பலி

தொரட்டி  பட நாயகன் ஷமன்மித்ரு இன்று காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார்  கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று குரோம்பேட்டை நிலா மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார் …

கொரோனாவுக்கு மற்றுமொரு நடிகர் பலி Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைப் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிக்கு திருநாவுக்கரசர் கண்டனம்

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு இந்திய நாடுமுழுவதும் பரவிக்கிடக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிமற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியனவற்றைதனியாருக்கு விற்க, தனியார்மயமாக்க எடுத்து வரும்நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது.  வருத்தத்திற்குரியது, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1937-ல்தொடங்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போதுதமிழ்நாட்டில் சுமார் 1500-க்கும் மேற்பட்டகிளைகளோடு குக்கிராமங்கள் வரை பரவலாகசெயல்படக் கூடிய வங்கியாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது.  அதே போல் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவங்கியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ​வங்கிகள் இணைப்பு என தொடங்கி சிலவங்கிகளை பெரிய வங்கிகளோடு இணைத்து, தற்போதுபெரிய வங்கிகளை தனியார் மயமாக்குவதால்வங்கிகளின் வரவு செலவு மற்றும் நாட்டின்பொருளாதாரத்தை ஒரு சில தனிப் பெரும்முதலாளிகளிடம் ஒப்படைத்து மக்கள் தனியாரிடம்கையேந்தும் நிலைக்கு தள்ளப்படப் போகிறார்கள்,  ​காங்கிரஸ் அரசு அன்னை இந்திராகாந்திஅம்மையார் தலைமையில்  தனியார் வங்கிகளைதேசிய உடமையாக்கியது.  ஆனால் இன்றோ மத்தியபா.ஜ.க அரசு முற்றிலும் எதிர்மறையாகதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை மீண்டும் தனியார்மயமாக்கி இந்த தேசத்தை 40 ஆண்டுகளுக்குபின்னோக்கி இழுத்துச் செல்ல முனைகிறது.  இந்நிலையில் வங்கிகளில் பணியாற்றும்பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள், லட்சக்கணக்கான அவர்களின் குடும்பத்தினர்மட்டுமின்றி பல கோடி மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே வங்கிகள் தனியார்களுக்கு விற்க இருக்கும்முடிவை  பொது மக்களின் நலன் கருதி மத்திய அரசுஉடனடியாக கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைப் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிக்கு திருநாவுக்கரசர் கண்டனம் Read More

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்கப்அரசு அனுமதி அளிக்கக் கூடாது – வேல்முருகன்

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் …

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்கப்அரசு அனுமதி அளிக்கக் கூடாது – வேல்முருகன் Read More

டில்லிக்கான தமிழகரசின் சிறப்பு பிரதிநியாக விஜயன் பொறுப்பேற்றார்

தமிழ்நாடு அரசின் புது டில்லிக்காண சிறப்பு பிரதிநிதி ஏ.கே எஸ். விஜயன் அமைச்சர் துரை முருகன்  முன்னிலையில் புதுடில்லி வைகை தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள சிறப்பு சிறப்பு பிரதிநிதியின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவ்வமயம் மாண்புமிகு பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், செந்தில்குமார், சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன்  T.R.V.S.ரமேஷ், பொன் …

டில்லிக்கான தமிழகரசின் சிறப்பு பிரதிநியாக விஜயன் பொறுப்பேற்றார் Read More

“நூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின்படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை” – முதல்வர் மு.க.ஸ்டாலின்புகழாரம்

15.06.2021, செவ்வாய்க்கிழமை, மாலை 6 மணிக்கு, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ளமுதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டுநிறைவைக் (1921-2021)கொண்டாடும் ‘ஜானகிராமம்‘ என்ற நூலைவெளியிட்டார். அப்போது முதல்வர், “தமிழின்தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை. அவரது படைப்புகள்குறித்துப் பல்வேறுதுறையைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட இந்நூலைவெளியிடுவதில் பெருமையடைகிறேன். தி.ஜானகிராமன்நூற்றாண்டு விழாவை முன்னெடுக்கும் அனைவர்க்கும்எனது நன்றிகள்“ என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடிக்குஅருகிலுள்ள ‘தேவங்குடி’ என்ற ஒரு சிறிய கிராமத்தில், தியாகராஜ சாஸ்திரி – நாகலட்சுமி ஆகியோரின்இரண்டாம் மகனாக, 28.06.1921இல்பிறந்த தி.ஜானகிராமன், தமிழின் மகத்தானகலைஞர்களுள் ஒருவர். தி.ஜானகிராமன் மறைந்து(18.11.1982) முப்பத்தொன்பது ஆண்டுகளாகிவிட்டபிறகும், நவீனத் தமிழிலக்கியத்தில் அவர் புகழ்இன்றும் ஓங்கியே இருக்கிறது. அவருடையபுனைகதைகள், தமிழ் வாசகர்களால் இன்றும் விரும்பிவாசிக்கப்படுகின்றன. அகில இந்திய வானொலியின்கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றிஓய்வுபெற்ற தி.ஜானகிராமன், தஞ்சாவூர் மாவட்டமக்களின் வாழ்வியலைக் கலைத்திறத்துடன் தம்படைப்புகளில் பதிவுசெய்த ஒரு முன்னோடிஎழுத்தாளராவார். அவர் எழுத்தில் காவிரியும் இசையும்தஞ்சை மண்ணின் இயற்கை வளமும் டெல்டாமனிதர்களின் வாழ்வியல் கோலங்களும் நுட்பமாகப்பதிவுபெற்றுள்ளன. சாகித்திய அகாதமிவிருது (1979) பெற்ற அமரர் தி.ஜானகிராமனின்(28.06.2021) நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும்நோக்கில், தி.ஜா. ஆய்வாளர் கல்யாணராமன், பல்வேறுஎழுத்தாளர்களிடமிருந்து தி.ஜானகிராமனின்படைப்புகளைப் பற்றிய (102) கட்டுரைகளைப்பெற்று, ‘ஜானகிராமம்‘ என்றதலைப்பில், 1032 பக்கங்களில் ஒரு பெருநூலைத்தொகுத்துள்ளார். இந்நூலைக் ‘காலச்சுவடு‘ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.15.06.2021 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குமுதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்வெளியிட, ‘ஜானகிராமம்‘ நூலின் முதல் பிரதியைத்தி.ஜானகிராமனின் மகள் உமாசங்கரியின் சார்பாக, ‘விப்ராஸ் ஆட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்திருமதி கெஜலக்ஷ்மி ரகு பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், இந்நூலின்தொகுப்பாசிரியர் கல்யாணராமன், நந்தனம் கல்லூரித்தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சீதாபதி ரகு, கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தா.அ.சிரிஷாராமன், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

“நூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின்படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை” – முதல்வர் மு.க.ஸ்டாலின்புகழாரம் Read More

கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட அளவில் சிறப்புக் குழுக்கள் அமைக்கவேண்டும் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை

மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7வது தெருவை சேர்ந்த முஹம்மது அலி (37) என்பவர் கந்துவட்டி தொல்லை காரணமாகக் காவல்துறையினருக்கு வேண்டுகோள் வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் உலுக்கி உள்ளது.  தமிழகத்தில் கந்து வட்டி காரணமாகத் …

கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட அளவில் சிறப்புக் குழுக்கள் அமைக்கவேண்டும் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை Read More

சொன்னதோடு சொல்லாததையும் செய்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார் ரவீந்தர் சந்திரசேகர்

கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ என்றொரு திரைப்படத்தை காண நேரிட்டது. தனியறை இருளில் படம் பல கேள்விகளையும் சங்கடங்களையும் மனதிற்குள் ஏற்படுத்திக் கொண்டே ஓடியது. பெண் காவலர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான, மன ரீதியான சிக்கல்களை முகத்தில் …

சொன்னதோடு சொல்லாததையும் செய்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார் ரவீந்தர் சந்திரசேகர் Read More