கொரோனா தொற்றால் பல மாதங்கள் மூடிக்கிடந்த டீ கடைகள் மீண்டும் திறப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின்பரவலைக் கட்டுப்படுத்த கடந்த  31-5-2021 முதல்நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்லபலனை அளித்துள்ளது. இந்நிலையில், மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்றநோக்கத்தில், நோய்ப் பரவல் முழுமையாக கட்டுக்குள்வராத கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள்மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டாமாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில்தளர்வுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பல்வேறுதரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள்பரிசீலிக்கப்பட்டு, மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டின்  இதர 27 மாவட்டங்களில் 14-6-2021 முதல், தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும்வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல்முறையில்  தேநீர் வாங்க வரும் பொது மக்கள்பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச்செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத்தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதிஇல்லை.  மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதிஅளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள்விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவைஇயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும்அனுமதிக்கப்படுகிறது. பொது மக்களின் நலன் கருதி, அரசுஅலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும்சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.  கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவேஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காதநிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம்செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில்கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள்50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதிஅளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றால் பல மாதங்கள் மூடிக்கிடந்த டீ கடைகள் மீண்டும் திறப்பு Read More

QS உலக பல்கலைக்கழக தரவரிசையில்புதுவை பல்கலைக்கழகம் முக்கிய இடம்பிடித்துள்ளது

QSஉலக பல்கலைக்கழக தரவரிசையானது, பல்கலைக்கழகத்தின்  பல முக்கிய பணிகள் – கல்வியாண்டு தேர்ச்சி  விகிதம்/நற்பெயர், பல்கலைக்கழகத்தின் தலைமையின் அணுகுமுறை/அர்ப்பணிப்பு, ஆசிரிய மாணவர் விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச ஆசிரியர்கள் விகிதம் மற்றும் சர்வதேச மாணவர்கள் விகிதம் போன்ற ஆறு கடுமையான செயல்திறன் குறிகாட்டிகளுடன் தரவரிசை பட்டியல்2022 சமீபத்தில் வெளியிட்டது  இதில் புதுவை பல்கலைக்கழகம்  801 முதல் 1000 வகைகளுக்கு (category) இடையில் தரவரிசை பெற்ற …

QS உலக பல்கலைக்கழக தரவரிசையில்புதுவை பல்கலைக்கழகம் முக்கிய இடம்பிடித்துள்ளது Read More

பெண் போலீசார் சாலையோர பாதுகாப்பில் நிற்க வேண்டாமென ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற இயக்குநர் சுரேஷ் காமாட்சி

பெண் போலீசாரின் பெருந்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காக சாலைகளில் நிற்பது. அதிலென்ன இருக்கிறது என சாதாரணமாகக் கடந்து போகும்போது, ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும் அவஸ்தையையும் தருகிறது என்பதை மிக மிக அவசரம் படத்தில் சொல்லியிருந்தோம். ரொம்ப …

பெண் போலீசார் சாலையோர பாதுகாப்பில் நிற்க வேண்டாமென ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற இயக்குநர் சுரேஷ் காமாட்சி Read More

அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் திறந்திட எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கைகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில், வழிபாட்டுத் தலங்களுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இத்தகைய பெருந்தொற்று காலத்தில் வீடுகளில் முடங்கியிருக்கும் மக்களுக்கு இறைவழிபாடு ஒன்றே மன அமைதியை தரும் …

அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் திறந்திட எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

பெண்களும் அர்ச்சகராகலாமென அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

பெண்களும் அர்ச்சகராகலாமென அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார் Read More

மதுக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம்

கொரானா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்ற நிலையில், பல்வேறு தொழில்கள் முழுமையாக தொடங்கப்படாமல் இருக்கின்றன. மக்கள் வேலைவாய்ப்புகளை  இழந்து நிற்கின்றனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் போதிய வருவாய் இன்றி கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலையில் ஊரடங்கு தளர்வு என்று கூறி திங்கள்கிழமை முதல் …

மதுக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் Read More

மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முன்னேற்றக் கழகம் போராட்டம் அறுவிப்பு

கொரானாவின்கோரத்தாண்டவத்தால் பல இன்னுயிர்களைகடைநிலை குடிமகன் முதல் பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், நீதித்துறை உள்ளிட்ட ஏனையபிற அரசுத்துறைகளைச்சேர்ந்த உயர் அதிகாரிகள் வரைக்கும் உயிர்பலி ஏற்பட்டு நிறைய பேர்சொல்லொண்ணா துயரத்திலும், துக்கத்திலும், மிகுந்த மன மற்றும் பண கஷ்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். டீக்கடை கூட திறக்காத இந்த சூழ்நிலையில்  டாஸ்மாக் கடை திறப்பு என்ற அறிவிப்பு என்பது கடைநிலை குடிமகனின் குடும்பம்முதல் காவல்துறையினரின் குடும்பம் வரை  அனைத்து சமூக மக்களும் பல்வேறு தேவையில்லா அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்படும் அபாய சூழ்நிலைய உருவாக்கியுள்ளது. டாஸ்மாக்கின் போதையா? (இல்லை) கோயில்களின் கீதையா? என்ற தலைப்பில் மொட்டை போட்டு மற்றும் பட்டை அடித்து கையில் நீதிதேவதையின் தராசை ஏந்தி திமுக அரசிடம் நியாயம் கேட்டு  டாஸ்மாக் கடை திறப்பு அறிவிப்பை உடனே திரும்பிப் பெற வேண்டும் அல்லது வருகிற14.06.2021 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட/பிராத்தனை செய்வதற்கும் அனுமதி வழங்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எங்களின் இந்த நூதன போராட்டம் தமிழகம் முழுவதும் வருகிற 15.06.2021 அன்று நடத்துகிறோம். சென்னையில் எனது தலைமையில்  அருள்மிகு  பார்த்தசாரதி திருக்கோயில் குளம்அருகே, திருவல்லிக்கேணியில் நடைபெறஉள்ளது. இந்த நூதன அறப்போராட்டமானது 144 தடைஉத்தரவிற்கு உட்பட்டு, மத்திய மாநில அரசுகளின் கோரான வழிமுறைகளை பின்பற்றியும், சமூகஇடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர். எஸ் கே சுவாமி வழக்கறிஞர் மற்றும் தலைவர் தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் 

மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முன்னேற்றக் கழகம் போராட்டம் அறுவிப்பு Read More

பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியதென்கிறார் பெ. மணியரசன்

சாட்டை” வலையொளி ஊடகவியலாளர் துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட 4 பேர் மீது பிணையில் வர …

பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியதென்கிறார் பெ. மணியரசன் Read More

மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு – சீமான்

தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த …

மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு – சீமான் Read More

திருவள்ளுவர் ஓவியத்திற்கு சிறப்புச் செய்க தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

1967 ஜூன் 23 அன்று, தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான அரசு, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணை ஒன்றை வெளியிட்டது. G.O.MS.1.1193.  அதன்படி, ஒவியப் பெருந்தகை, கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களால் வரையப்பட்டு, தமிழகத்தில் அரசியல், மொழி, கலை சார்ந்த …

திருவள்ளுவர் ஓவியத்திற்கு சிறப்புச் செய்க தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள் Read More